மிகவும் சோம்பேறியான 5 ராசிகள்- இவர்களுடன் இருப்பது கொஞ்சம் கஷ்டமாம்
மனிதனுக்கு இருக்கவே கூடாத ஒரு விஷயங்களில் சோம்பேறித்தனம் ஒன்று. இந்த சோம்பல் ஒருவருக்கு வந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடையமுடியாது. அப்படியாக, 12 ராசிகளில் மிகவும் சோம்பேறியான ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பான நபர் போல் தோன்றினாலும், இவர்கள் மிகவும் சொகுசாக வாழ விரும்புவார்கள். அவர்கள் ஓர் இடத்தில் இருப்பதை மிகவும் வசதியாக உணர்ந்து விட்டால் பிறகு அவர்களை அங்கு இருந்து நகர்த்துவது மிகவும் கடினமாகும்.
மீனம்:
மீன ராசியினர் கட்டாயம் சோம்பேறித்தனம் உடையவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் தனி உலகத்தில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் உலகத்திற்கு சென்று அவர்களிடம் ஏதேனும் வேலையை செய்ய சொல்வது மிகவும் கடினம். அவர்களாக முன் வந்து செய்தாலே உண்டு.
கடகம்:
கடக ராசியை பொறுத்த வரையில் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்கள் பிடித்த அனைத்து விஷயங்களையும் செய்வார்கள். இருந்தாலும் இவர்களிடம் அதிகமான சோம்பேறித்தனத்தை பார்க்கலாம். அவர்களுக்கான நேரத்தை தாண்டி பிற நேரங்களில் அவர்களை நெருங்குவதே கடினம்.
துலாம்:
துலாம் ராசியினர் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக காணப்பட்டாலும், அவர்களிடம் ஒரு வேலையை எளிதாக வாங்கி விட முடியாது. சமயங்களில் இவர்கள் மிகவும் சோர்வாகவும் ஒரு விஷயத்தை தள்ளி போடுவது எப்படி என்பதை பற்றி மட்டுமே அதிகம் யோசிப்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் எப்பொழுதும் முன் நின்று ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என்று நினைப்பார்களே தவிர்த்து அதற்கான வேலையை கட்டாயம் அவர்கள் செய்ய மாட்டார்கள். இவர்கள் பிறரிடம் வேலை வாங்குவதில் மிகவும் திறமைசாலிகள். ஆனால், தான் ஒரு வேலையை செய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு கசப்பாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |