நம் தலைவிதியை மாற்றும் முக்கியமான 5 தெய்வங்களின் வழிபாடுகள்
மனிதராக பிறந்த எல்லோருடைய வாழ்க்கையிலும் துன்பம் வருவது இயல்புதான். அந்த துன்பத்தில் தான் மனிதன் அவனை அறிந்து கொள்கின்றான், அந்த துன்பத்தில் தான் மனிதன் அவனை சுற்றி உள்ள மனிதர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்கிறான்.
ஆக என்னதான் நாம் துன்பத்தில் இருந்து கடந்து செல்வதற்கு கடினமாக இருந்தாலும், இறைவனுடைய அருட்பார்வை நம் மீது இருந்து விட்டால் எப்பேர்ப்பட்ட துயரத்தையும் நாம் நொடி பொழுதில் கடந்து விடலாம்.
மேலும், இறை வழிபாடு என்பது நமக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் இந்த உலகத்தில் நம்மை மீறி ஒரு மிகப்பெரிய சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் மிக தீர்க்கமாக உணர செய்து விடும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகள் எப்பொழுது ஆபத்துக்களை நமக்கு கொடுத்தாலும், நம்முடைய தலைவிதி மிகவும் பாவத்திற்குரியதாக இருந்தாலும் நம்முடைய மனதில் நல்ல சிந்தனைகளும் இறை வழிபாடும் இருந்து விட்டால் அனைத்தையும் மாற்றி அமைத்து விடலாம்.
மிக முக்கியமாக யாருடைய மனதில் வஞ்சகம், பொறாமை, போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் மனதில் தான் இறைவன் குடி கொள்வான். அவர்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்.

அதனால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு முதலில் நாம் நல்ல விஷயங்களை பார்ப்பதும் படிப்பதும் நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவதோடு சேர்த்து இறைவனை மனதார நம்பிக்கையோடு வழிபாடு செய்ய நிச்சயம் பிறவி பலனை அடையலாம்.
அப்படியாக நம்முடைய தலைவிதையை மாற்றக்கூடிய 5 தெய்வங்கள் இருக்கிறார்கள். இவர்களை நாம் முறையாக தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் மனதிலும் நிச்சயமாக நல்ல மாற்றத்தை காண முடியும். அதைப் பற்றி பார்ப்போம்.
1. கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் தன் பக்தர்கள் துயரில் இருக்க அவர் கட்டாயமாக ஓடி வந்து அவர்களை காப்பாற்றுவார். அந்த வகையில் தினமும் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள் அல்லது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு எழுதி வாருங்கள். இவை நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
2. செல்வத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அதிபதியாக இருக்கக்கூடியவள் மகாலட்சுமி தாயார். அவளை வழிபாடு செய்வதற்கு உரிய நாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது. அதனால் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர ஹோரையில் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ" என்று 108 முறை பாராயணம் செய்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற பொருளாதாரக் கஷ்டத்திற்கு நல்ல வழி பிறக்கும்.

3. ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி வர வேண்டும் என்றால் அவர்களுடைய கர்ம வினைகள் மொத்தமாக அழிந்துவிட வேண்டும். அந்த கர்ம வினைகளை அழிக்கக்கூடிய இறைவன் எம்பெருமான் சிவபெருமான் தான். ஆக சிவபெருமானுடைய "ஓம் நம சிவாய நமஹ " மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய கட்டாயம் நல்ல மாற்றத்தை நாம் உணரலாம்.
4. நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு காரியங்களை செய்வதற்கு முன்னரும் கட்டாயமாக விநாயகப் பெருமானுடைய ஆசிர்வாதத்தை பெற்று தான் நாம் அந்த காரியத்தை தொடங்குவோம். அந்த வகையில் தினமும் நாம் விநாயகப் பெருமானை மறவாமல் "ஓம் கணபதியே நமஹ" என்று 27 முறை சொல்லி வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.
5. பக்தர்களை குழந்தையாக பாவித்து ஒரு தாயைப் போல் அன்பு காட்டக்கூடியவள் அன்னை பராசக்தி. அவளை சரணடைந்து விட்டால் நாம் அவள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவோம். பிறகு அவள் நமக்கு எந்த தீமைகளும் வரவிடாமல் அன்னை பராசக்தி நம்மை காத்தருவாள். அந்த வகைகளில் அமாவாசை நாட்களில் "ஓம் பராசக்தியே நமஹ" இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாடு செய்ய அன்னையின் அருளால் வாழ்க்கையில் சிந்திக்கின்ற துன்பங்கள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |