2025 வைகுண்ட ஏகாதசி: அன்று தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்
விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் அற்புதமான மற்றும் சக்தி வாய்ந்த விரதமாக இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இறுதியாக வைகுண்ட ஏகாதசி வர உள்ளது. வருடத்தில் வரும் ஏகாதசிகளில் இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி முக்கியமானதாகும்.
அப்படியாக, இந்த வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரஇருக்கிறது. ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலே ஒரு வைகுண்ட ஏகாதசி நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த ஆண்டு இறுதியாகவும் மற்றொரு வைகுண்ட ஏகாதசி விரதம் வருவது சிறப்பாகும். இதை "புத்தரதா ஏகாதசி" என்றும் அழைக்கிறார்கள்.
மற்ற மாதங்களில் வரக்கூடிய ஏகாதசி தினங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய இந்த வைகுண்ட ஏகாதசி தினம் அன்று இரவு முழுவதும் கண் விழித்து பெருமானின் திருநாமங்களை தொடர்ச்சியாக சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாவங்கள் நீங்கும், அதைவிட கிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகள் எல்லாம் முற்றிலுமாக உடையும்.

இவை எல்லாம் விட முக்கியமாக நமக்கு புண்ணியம் வந்து சேரும். கூடுதலாக மற்றொரு சிறப்பு வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கு வைகுண்ட பதவியும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆக, இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த நன்னாளில் நம்மால் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் மிக எளிமையான முறையில் நாம் பெருமாளை வழிபாடு செய்தால் நிச்சயமாக நல்ல பலனை பெறலாம்.
அப்படியாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று நாம் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று செய்ய வேண்டியவை:
1. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது என்பது ஒரு மிக அற்புதமான விஷயம் ஆகும். அதாவது வீட்டில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை அல்லது பெருமாளின் ஏதாவது ஒரு சிலைக்கு பஞ்சாமிர்தம் (பால், தயிர், நெய், தேன், சர்க்கரை) கொண்டு அபிஷேகம் செய்தால் ஒரு நல்ல பலன்களை பெறலாம்.
இவ்வாறு சிலை இல்லாதவர்கள் பஞ்சாமிர்தத்தை நீங்கள் நெய்வேத்தியமாகவும் படைத்து வழிபடலாம். இதனால் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.
2. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒரு வெற்றிலையில் "ஓம் விஷ்ணவே நமஹ" என்று எழுதி பகவான் விஷ்ணுவின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து பூஜைக்கு பிறகு அந்த வெற்றிலையை உங்களுடைய பணம் வைக்கக்கூடிய பெட்டி அல்லது பீரோவில் வைத்து விடுங்கள். இது உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய ஒரு சிக்கலை போக்கி நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

3. உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் சிறந்து விளங்க அன்றைய தினம் மகாவிஷ்ணுவிற்கு ஒரு வாழைப்பழம் படைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு பசு மாட்டிற்கு நெய் தடவிய ரொட்டி மற்றும் வெல்லம் வழங்கினால் அவர்கள் படிப்பிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
4. வீடுகளில் துளசி செடி வைத்திருப்பவர்கள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மாலை துளசி செடிக்கு அருகே நெய் தீபம் ஏற்றி துளசி செடியை ஏழு முறை வலம் வந்து வழிபாடு செய்து துளசி இலைகளின் மீது "ஸ்ரீ" என்று எழுதி மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணித்தோம் என்றால் நமக்கு ஒரு செல்வ செழிப்பை உருவாக்கி கொடுப்பார்.
இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும் துளசியால் மாலை கட்டி போட்டு வழிபாடு செய்வதும் ஒரு மிகச்சிறந்த பலனாகும் இதனால் நமக்கு மகாலட்சுமியின் முழு அருளும் கிடைக்கும்.
5. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மாலை நேரத்தில் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கையில் எதிரிகள் தொல்லையும் தீய சக்திகளும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |