புத்தாண்டில் இந்த 5 சிலைகளை வீடுகளில் வைத்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்
2026 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக பிறந்தது. மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நம் வீடுகளில் வாஸ்துவை சரி செய்து விட்டோம் என்றால் நிச்சயம் நம் எதிர்பார்த்தது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடக்க தொடங்கும். அப்படியாக, நம்முடைய வீடுகளில் நல்ல மாற்றங்கள் நிகழ வாஸ்து ரீதியாக கட்டாயம் வாங்கி வைக்க வேண்டிய வாஸ்து சிலைகளை பற்றி பார்ப்போம்.

1. புராணங்களில் விஷ்ணு பகவானின் அம்சமாக கருதக்கூடிய இந்த ஆமை சிலையை வீடுகளில் வாங்கி வைப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் விஷ்ணு பகவானின் அருளை முழுமையாக பெறுவதற்கு வாஸ்து சிலையான இந்த ஆமைகளை வாங்கி வடக்கு திசையில் வைத்தால் பொருளாதார துன்பம் விலகும் குடும்பத்தில் மகிழ்ச்சியு பெருகும்.
2. நம்முடைய இந்து மதத்தில் யானை செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த யானை அன்னை கஜலட்சுமி வாகனம் என்பதால் மிகவும் அதிர்ஷ்டகரமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த யானை சிலையை நம் வீடுகளில் வாங்கி வைத்தால் அன்னை லட்சுமி தேவியின் அருளை நாம் பெற்று வீடுகளில் நிம்மதியான நிலையை பெறலாம்.
இந்த சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை பார்ப்பது போல் வைக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வெள்ளி யானை சிலையை நாம் படுக்கையறையில் வைத்தால் ராகு பகவானால் ஏற்படுகின்ற அசுப பலன்கள் எல்லாம் குறையும்.

3. பொதுவாகவே அன்னப்பறவை என்பது அமைதியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதை நாம் படுக்கை அறையில் ஜோடியாக வைக்கும் பொழுது பொருளாதாரத்தில் குழப்பங்களும் கடன் பிரச்சினை இருந்தால் அவை எல்லாம் வெகு விரைவில் சரியாகும். அதோடு கணவன் மனைவிக்கு இடையே ஒரு நல்ல அன்பும் அமைதியும் உருவாகும்.
4. இந்து மதத்தில் கிளி என்பது தவிர்க்க முடியாத ஒரு தெய்வீக பறவையாகவே இருக்கிறது. இந்த கிளி வீடுகளில் ஒரு நேர்மறையான ஒரு ஆற்றலை அதிகரிக்கிறது. அதனால் வீடுகளில் குழந்தைகள் இருக்கக்கூடிய அறைகளில் இந்த கிளியின் சிலை அல்லது படத்தை நாம் வாங்கி வைக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு நல்ல கவன ஈர்ப்புகள் கிடைக்கும். அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்கும்.
5. இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே மீன்களை விரும்பி வாங்கி வளர்த்து வருகிறார்கள். ஆக வாஸ்து ரீதியாக மீன் வீடுகளில் வாங்கி வளர்ப்பதும் அல்லது சிலையாக வைப்பதும் மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது.
பித்தளை அல்லது வெள்ளி மீன் சிலைகளை வீடுகளில் வாங்கி வைத்து வளர்க்கலாம். இவ்வாறு வாங்கும் சிலைகளை வீட்டின் கிழக்கு அழுது வடக்கு திசையில் வைத்தால் மகிழ்ச்சி மற்றும் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |