வாஸ்து: கோடீஸ்வர யோகத்தை அள்ளிக் கொடுக்கும் 5 வாஸ்து குறிப்புகள்
ஜோதிடத்தில் கட்டாயமாக வாஸ்து என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வாஸ்து சரியில்லாத இடங்களில் நாம் அமரும் பொழுது பல கஷ்டங்களை சந்திக்கக்கூடும். மேலும், அதனால் மன அழுத்தம் தொடங்கி பொருளாதார சிக்கல் வரை அனைத்து பிரச்சனையும் வாஸ்து சரியில்லாத இடம் நமக்கு ஏற்படுத்தி விடும்.
அப்படியாக நம்முடைய குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சியும் குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியமும் சிறந்து விளங்க பின்பற்ற வேண்டிய 5 முக்கிய வாஸ்து குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
1. நம் வீடுகளில் வடகிழக்கு திசைகளில் மீன் தொட்டிகள் அமைப்பது நமக்கு சிறந்த நன்மையை பெற்றுக் கொடுக்கும். மேலும் அந்த திசைகளில் வைக்கும் மீன் தொட்டியானது எப்பொழுதும் சுத்தமான நீரைக் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும். இது நம்முடைய வீட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி கொடுக்கக் கூடியதாக அமையும்.
2. நம் வீடுகளில் ஒரு பொழுதும் தென்மேற்கு திசைகளில் கழிவறையை அமைப்பது தவிர்க்க வேண்டும். இதனால் நம் குடும்பங்களில் சில அமைதியின்மை உருவாக்கப்படும்.
3. அதேபோல் வீடுகளில் ஒரு பொழுதும் உடைந்த கண்ணாடிகளோ உடைந்த கண்ணாடி பொருட்களோ இருப்பது கூடாது. அவ்வாறு உடைந்த கண்ணாடிகள் வீடுகளில் இருந்தால் அதை உடனே சுத்தம் செய்வதுதான் நம்முடைய வீடுகளுக்கு நன்மை தரும். உடைந்த கண்ணாடிகள் வீடுகளில் இருக்கும் பொழுது எதிர்மறை சக்திகள் மிக எளிதாக நம் வீட்டுக்குள் வரக்கூடும்.
4. வீடுகளில் வடக்கிழங்கு என்பது குபேர திசையாக கருதப்படுகிறது. அதனால் அந்த இடங்களில் குபேரருடைய சிலைகளை வாங்கி வைப்பது நம்முடைய பொருளாதாரத்தை சீராக அமையப்பெற்று கொடுக்கும்.
5. மேலும் நம் வீடுகளில் வளர்க்கக்கூடிய செடியானது நம்முடைய வீடுகளுக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுக்கிறது. அதில் முக்கியமாக துளசி செடியை நம் வீடுகளில் வளர்ப்பது நம்முடைய வீடுகளுக்கு நேர்மறை ஆற்றலை உருவாக்கி தரக்கூடும்.
அது மட்டும் இல்லாமல் துளசி செடியை நாம் தென்மேற்கு திசைகளிலும் வட கிழக்கு திசைகளிலும் வைப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதேபோல் செம்பருத்தி செடிகளையும் நம் வீடுகளில் வளர்ப்பதால் நமக்கு பல நன்மைகள் நடக்கிறது. அவை நமக்கு பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றத்தை பெற்று வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







