பெண்கள் மறந்தும் செய்யவே கூடாத 6 விஷயங்கள் - சாஸ்திரம் சொல்வதென்ன?

By Sumathi Dec 06, 2025 02:32 PM GMT
Report

பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை போலவே, கண்டிப்பாக செய்யக் கூடாது என்றும் சில விஷயங்கள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் மறந்தும் செய்யவே கூடாத 6 விஷயங்கள் - சாஸ்திரம் சொல்வதென்ன? | 6 Things Women Shouldnt Do As Per Spiritual

அவற்றை மீறி செய்வதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகும் என கூறப்படுகிறது. அப்படி பெண்கள் கண்டிப்பாக செய்யவே கூடாத 6 விஷயங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

பெண்களே கவனம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. அதற்கு பதில் அவரது கணவரின் கைகளால் கொடுத்து உடைக்க சொல்லலாம்.

பெண்கள் தங்களின் கைகளால் பூசணிக்காயை எடுத்து திருஷ்டி சுற்றக் கூடாது. ஆண்கள் மட்டுமே பூசணிக்காயை திருஷ்டி சுற்றி, உடைக்க வேண்டும்.

திருமணமான பெண்களுக்கு காலில் போடும் மெட்டி மிகவும் முக்கியமானதாகும். காலில் மெட்டி அணியாமல் இருக்கக் கூடாது. நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் இல்லாமல் வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது.

பெண்கள் மறந்தும் செய்யவே கூடாத 6 விஷயங்கள் - சாஸ்திரம் சொல்வதென்ன? | 6 Things Women Shouldnt Do As Per Spiritual

பெண்கள் தூங்கும் போது நேராகவோ அல்லது ஒரு பக்கமாக சாய்ந்து பக்கவாட்டில் திரும்பியோ தான் படுக்க வேண்டும். ஒரு போதும் கவிழ்ந்து படுத்து தூங்கக் கூடாது. அதே போல் கோவிலில் வழிபடும் போதும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக் கூடாது.

திருமணமான பெண்கள் எந்த ஒரு தர்மத்தையும் அவர்களின் கணவனுக்கு தெரியாமல் செய்யக் கூடாது. கணவனுக்கு தெரியாமல் செய்வதால் பாவத்தை சேர்க்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

500 ஆண்டுகளுக்கு பின்; 2026-ல் இரட்டை ராஜயோகம் - 3 ராசிக்கு பணமழை

500 ஆண்டுகளுக்கு பின்; 2026-ல் இரட்டை ராஜயோகம் - 3 ராசிக்கு பணமழை

 சுமங்கலிப் பெண்கள் ஒரு போதும் இறந்து போன தங்களின் தாய், தந்தைக்காக, அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்யக் கூடாது. தாயையோ அல்லது தந்தையையோ அல்லது தாய் மற்றும் தந்தை இருவரையுமோ, மனைவி மற்றும் குழந்தைகளை இழந்த ஆண்கள் மட்டுமே அமாவாசை, திவசம் வரும் நாட்களில் எள்ளும் தண்ணீரும் இறைத்து பித்ரு தர்ப்பணம் செய்தும், பிண்ட தானம் செய்தும் வழிபட வேண்டும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US