வயதான பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 30 நிமிடங்களில் நீங்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்
திருப்பதியில் வயதான பக்தர்களுக்கு ஏழுமலையானை வெறும் 30 நிமிடங்களில் தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்:
திருப்பதிக்கு தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள். விடுமுறை நாட்களில் இன்னும் கூட்டம் அதிகமாகிறது.
பக்தர்கள் இதன் காரணமாக 24 மணி நேரத்திற்கு மேலாக தரிசனம் செய்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வரும் 30 நிமிடங்களில் ஏழுமலையான தரிசனம் செய்ய இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த தரிசனத்திற்காக காலை 10 மணி முதல் 3 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எவ்வாறு தரிசனம் செய்வது?
65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுண்டர் எஸ் 1ல் இவர்கள் காண்பிக்க வேண்டும். பின்னர் கோவிலின் வலது சுவரை ஒட்டி பாலத்தின் கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் எளிதாக இவர்கள் நடந்து செல்லலாம்.
தரிசன வரிசைக்கு சென்றவுடன் முப்பது நிமிடங்களில் தரிசனத்தை முடித்து இவர்கள் உடனடியாக வெளியே வரலாம்.
இலவச உணவு:
தரிசனம் முடித்து வெளியே வரக்கூடிய முதியோர் அனைவருக்கும் இலவச சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படுகிறது. மேலும், பேட்டரி கார்கள் வழியாக வாகன நிறுத்தமிடத்தில் இருந்து கவுண்டருக்கும் பிறகு அங்கிருந்து வெளியேறும் செல்லும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |