சனி தோஷத்தில் இருந்து விடுபட செய்யவேண்டிய 7 முக்கியமான பரிகாரங்கள்
ஜோதிடத்தில் சனிபகவான் நீதிமானாக இருக்கக்கூடியவர். ஒரு மனிதன் மனரீதியாக ஒருவருக்கு தீங்க நினைத்தாலும், அந்த தீங்கிற்கான தக்க பதிலை உடனடியாக கொடுக்கக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி பகவான் தான். வாழ்க்கையில் நாம் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் தப்பிவிடலாம்.
ஆனால் சனி பகவானிடம் இருந்து மட்டும் நாம் எந்த காலத்திலும் நாம் தப்ப முடியாது. அதாவது எந்த காலகட்டத்திலும் நமக்கான பாடத்தையும் நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம பலனையும் கட்டாயம் கொடுத்துவிடுவார். அந்த வகையில் நாம் ஏதோ ஒரு காலத்தில் அறியாமல் செய்த தவறுக்கு கூட சனி பகவான் நம்மை திருத்திக் கொள்வதற்காக ஒரு சில பாடங்களை கற்பித்து கொடுப்பார்.
என்னதான் சனி பகவான் நமக்கு நன்மைகள் செய்யக்கூடியவராக இருந்தாலும் அவருடைய பாடம் நமக்கு பெரிய அளவில் தான் இருக்கும். அப்படியாக சனிபகவானுடைய பாதிப்பு மற்றும் சனி திசை, ஏழரை சனி போன்ற காலகட்டங்களில் நம் ஜாதக கட்டங்களில் சனி பகவான் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்து அந்த நபர் பல்வேறு வகையான சிக்கல்களில் சிக்குவதுண்டு.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நிச்சயம் அவர்கள் முதலில் நன்மையைச் செய்து நன்மையை சிந்தித்து செயல்பட வேண்டும். அதைவிட முக்கியமாக சனி பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.
1.இந்த காலகட்டங்களில் மறந்தும் சனிக்கிழமை இரும்பு தொடர்பான பொருட்களை வாங்காதீர்கள். ஆனால் இரும்பு தொடர்பான பொருட்களை நம் தானம் செய்வது சிறந்தது. அவ்வாறு தானம் செய்யும் பொழுது வேறு ஒரு நாட்களில் அந்த பொருளை வாங்கி சனிக்கிழமைகளில் தானம் செய்யலாம்.
2. ஒருபொழுதும் சனிக்கிழமை அன்று உப்பு வாங்க கூடாது. ஆனால் உப்பு தானம் செய்யலாம்.
3. கருப்பு எள் சனிக்கிழமை வாங்குவது அவ்வளவு உகந்தது அல்ல. அது நமக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடும். சனிக்கிழமைகளில் கருப்பு எள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முந்தைய நாளில் வாங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
4. நாம் ஒருபொழுதும் கடுகு எண்ணெய் சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. இவ்வாறு வாங்கும் பொழுது உடல் ரீதியான சில பிரச்சினைகளை சந்திக்கப்படும் ஆதலால் பிற நாட்களில் வாங்குவது ஒரு நல்ல பலனை கொடுக்கும்.
5. சனிக்கிழமை ஒரு பொழுதும் தோல் தொடர்பான எந்த ஒரு பொருட்களையும் வாங்காதீர்கள். இவை நமக்கு வீடுகளில் பிரச்சனைகளையும் வேலை ரீதியாக ஒரு பின்னடைவையும் கொடுக்ககூடும்.
6. அதைப்போல் மிக முக்கியமாக சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். இது நம்முடைய பொருளாதாரத்தில் சிக்கலில் உண்டு செய்யும். வெள்ளி, செவ்வாய்க்கிழமை துடைப்பம் வாங்குவதற்கு உகந்த நாளாக இருக்கிறது.
7. சனிக்கிழமை அன்று கருப்பு நிறத்தில் உடை அணிவது சிறந்த பலனை கொடுக்கும் என்றாலும் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகள் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |