மகாலக்ஷ்மியின் அருள் பெற இந்த 8 விஷயங்கள் செய்யுங்கள்.. அதிர்ஷ்டம் உறுதி
ஒரு மனிதன் செல்வந்தராக வாழ அவனுக்கு கிரக நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும் என்றாலும் நிச்சயம் அந்த விஷ்ணு பகவானின் மார்பில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் மிக மிக அவசியம், அவள் மனம் குளிர்ந்து மனம் வைத்தால் மட்டுமே ஒருவர் செல்வத்தில் விளையாட முடியும்.
அப்படியாக ஒருவர் வீடுகளுக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் அந்த வீடுகளில் தங்குவதற்கும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு 8 வழிமுறைகள் இருக்கிறது. அதை ஒருவர் வீடுகளில் செய்து விட்டார்கள் என்றால் நிச்சயம் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் நிற்கும். அதைப்பற்றி பார்ப்போம்.

1. ஒருவர் வீட்டில் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். எந்த ஒரு குடும்பத்தில் கால சூழ்நிலையால் பெண் பிள்ளைகள் ஏதோ மனதில் ஒரு வருத்தத்தை நிரப்பிக் கொண்டு வாழ்கிறார்களோ அவர்கள் வீட்டில் நிச்சயம் பிரச்சனை வந்துவிடும்.
2. நம்மை தேடி நம் வீட்டிற்கு வரக்கூடிய பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் நமக்கு பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகிறது. ஆதாவது அந்த இடத்தில் வீடுகளில் பெண்களை நாம் மதிக்கின்ற நிலை உருவாகுவதால் மகாலட்சுமி மனம் குளிர்ந்து ஆசீர்வாதம் வழங்குகிறார்.
3. வீடுகளில் தவறாமல் காலை நேரங்களில் வெங்கடேச சுப்ரபாதமும் மாலை நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஒலித்தால் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் எப்பொழுதும் கிடைக்கும்.
4. மனிதர்களையும் விலங்குகளையும் மதித்து நடக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் செய்து பழக வேண்டும். இவ்வாறு எவர் வீடுகளில் தர்மம் நிறைந்த எண்ணம் சூழ்ந்திருக்கிறதோ அங்கு அவர்களுக்கு மகாலட்சுமி அவர்களை தேடிச் சென்று அருளாசி வழங்குவார்.

5. அதேபோல் வீடுகளில் நிச்சயம் ஊறுகாய் இருக்க வேண்டும். எந்த வீடுகளில் சாப்பிடுவதற்கு ருசியான ஊறுகாய் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தரித்திரம் இருக்காது. அதனால் பல வகைகளில் வீடுகளில் ஊறுகாய் செய்து வைத்துக் கொள்வது உங்களுக்கு ஒரு நல்ல ஆற்றலை பெற்றுக் கொடுக்கும்.
6. வீடுகளில் நெல்லி மரம் வளர்ப்பது ஆரோக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் நல்லது. நெல்லி மரம் இருக்கின்ற வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். லட்சுமி தேவி நெல்லி மரத்தில் வாசம் செய்கிறார். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற ஒரு பெயர் இருக்கிறது.
அதேபோல் இது லட்சுமி குபேரருக்கும் உரிய மரமாக இருப்பதால் இவ்வளவு சிறப்பு மற்றும் தெய்வீக ஆற்றல் நிறைந்த லட்சுமி மரத்தை நம் வீடுகளில் வைத்திருக்கும் பொழுது தீய சக்திகள் நம்மை எப்பொழுதும் அண்டாது.
7. குடும்பத்தில் பெண்களை குறைத்து மதிப்பிட்டு அவர்களை அவமதிப்பதும் அழச் செய்வதும், தேவை இல்லாமல் சண்டை சச்சரவுகள் அவர்களிடம் வளர்ப்பது போன்ற செயல்களில் கட்டாயம் ஈடுபடக்கூடாது. இந்த செயல்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு ஒரு தீய விளைவுகளை கொடுத்து விடும்.
8. அதை போல் வீடுகளில் தினமும் காலை எழுந்தவுடன் கோபுரம் அல்லது சுவாமியின் திருவுருவம், துளசி போன்ற படத்தின் மீது கண் விழித்து எழுகின்ற போது நிச்சயம் அவர்களுக்கு அவர்களை அறியாமல் ஒரு நேர்மறை ஆற்றல் உருவாகிக்கொண்டிருக்கும். இதனால் அவர்கள் இறைவனுடைய ஆசிர்வாதத்தை எளிதில் பெற்றுவிடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |