தல அஜித்தின் திரையுலக பாதையை அன்றே கணித்த நடிகர் அனு மோகன்

Ajith Kumar Vijay Vijayakanth
By Kirthiga May 03, 2024 10:00 PM GMT
Kirthiga

Kirthiga

Report

நடிகர் அனு மோகன் பொதுவாகவே ஜோதிடத்தின் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவர். எனவே இவர் பலருக்கும் ஜோதிடம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் நடிகர் அஜித், விஜய் மற்றும் விஜயகாந்த் போன்ற பல பிரபலங்களுக்கும் ஜோதிடம் பார்த்து எதிர்கால வாழ்க்கையை கணித்துள்ளார்.

இது குறித்து அவர் ஓர் நேர்காணலில் தெரிவிக்கையில், சுபாஷ் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான பவித்ரா என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் அஜித்திற்கு ஜோதிடம் பார்த்தாக தெரிவித்துள்ளார்.

அப்போது நடிகர் அஜித்தின் ராசி மற்றும் பிறந்த திகதியை அறிந்துக்கொண்டு அவருடைய கைகளை பார்த்து அவர் கணிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது நடிகர் அஜித்தை பார்த்து நான் கூறினேன் ஒரு நாள் உங்களுடன் நடிப்பதற்காக நான் வரிசையில் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு நிகழ்ந்தால் நல்லது தான் சார். ஆனால் உங்களை நான் காத்திருக்க விட மாட்டேன். நான் நல்ல இடத்திற்கு சென்றால் போதும் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு நிகந்து முடிந்து ஒரு சில வருடங்களின் பின்னர் நடிகர் அஜின் தன்னை பார்த்தப் போது நன்றி சார். நீங்கள் கூறியப்படியே நான் இருக்கிறேன். அதிகளவில் பணம் சம்பாதிக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் அனு மோகன் விஜய் மற்றும் விஜயகாந்த் குறித்து கணித்த தகவல்கள் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

வீடியோ

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US