அட்சய திருதியை: தங்க நகை வாங்க முடியாதவர்கள் இதை வாங்கலாம்
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.
அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
அந்தவகையில், சிறப்புமிக்க அட்சய திருதியை நன்னாள் இந்த வருடம் மே மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.
காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால், நகை வாங்க பலரால் முடியாது.
அதனால் அதற்கு பதில் வேறு என்னென்ன பொருட்களை வாங்கினால் நல்லது என பார்க்கலாம்.
வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம், புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு மாறாக வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |