அஷ்டம சனி காலங்களில் நாம் வணக்க வேண்டிய சனி பகவான் எங்கு இருக்கிறார் தெரியுமா?

By Sakthi Raj Jun 24, 2024 11:00 AM GMT
Report

சனிதோஷம் அல்லது சனி திசை நடக்கிறது என்றால் நாம் அனைவரும் திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிசனம் செய்து வருவோம்.சனிதிசை சனியால் ஏதேனும் பாதிப்பு என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது திருநள்ளாறு தான்.ஆனால் அஷ்டம சனி தோஷத்துக்கென்று விசேஷ பரிகாரத் தலமும் இருக்கிறது.

அது தான் புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகில் அமைந்துள்ள எட்டியத்தளி அகதீஸ்வரர் திருக்கோயிலாகும்.அதை பற்றி பார்ப்போம்.

அஷ்டம சனி காலங்களில் நாம் வணக்க வேண்டிய சனி பகவான் எங்கு இருக்கிறார் தெரியுமா? | Ashtamathu Sani Vazhipadu Sani Bagavan Puthukottai

ஜாதகத்தில் சிலருக்கு சில தோஷம் இருக்கும் அவர்களும் அகத்தியரால் பூஜிக்க பட்ட இந்த தல சனி பகவானை தரிசனம் செய்யலாம்.

மேலும் களத்திர தோஷம் இருப்பவர்கள் கட்டாயம் இங்கு வந்து வழிபடு நல்லதோர் நிவாரணம் கிடைக்கும். இந்த கோயிலில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் நவக்கிரகம் அருகே நம்முடைய ஜாதகம் வைத்து பூஜை செய்கின்றனர். அப்படி பூஜை செய்யும் வழக்கம் இந்த கோயிலில் மட்டும் தான் இருக்கிறது.

ஒரு சமயம் அகத்தியர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தை அடைந்தார். மாலை நேரம் ஆகிவிட்டதால், நித்ய கர்மானுஷ்டங்களை முடிக்க எண்ணினார்.

அப்போது அங்கே ஒரு குளமும், சுயம்பு லிங்கமும் இருப்பதைக் பார்த்த அவர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து இரவு அங்கேயே தங்கி விட்டார்.

அச்சமயம் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் ராமேஸ்வரம் சென்று நீராடி விட்டு திருநள்ளாறு செல்வதற்காக அவ்வழியாக வந்த பொழுது அகத்திய முனிவரை சந்தித்தான்.

அஷ்டம சனி காலங்களில் நாம் வணக்க வேண்டிய சனி பகவான் எங்கு இருக்கிறார் தெரியுமா? | Ashtamathu Sani Vazhipadu Sani Bagavan Puthukottai

அந்த மன்னர், அகத்திய முனிவரிடம் தான் வந்த காரியம் சொல்ல அகத்தியரும் மன்னரிடம், அவனது அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்பி தான் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார் . அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றான்என்பது வரலாறு.

அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் பெற்றனர். இத்தலத்தில் சனி பகவான் சிறப்பு சக்திகளுடன் அருள்பாலிக்கிறார்.

கருவறையில் உள்ள இறைவன் ஈசான்யத்தை பார்ப்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மற்ற ஆலயங்களில் சனி பகவானுக்கு இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் அமைந்திருப்பார்கள்.

ஆனால், இங்கு வலப்பக்கத்தில் ராகு பகவானும், இடப்பக்கத்தில் கேது பகவானும் அருள்புரிகிறார்கள். ராகு பகவானின் பார்வை சனி பகவான் மீது படுவது மிகவும் சிறப்பாகும்.

குழந்தை பாக்கியம் அருளும் நெல்லுக்கடை மாரியம்மன்

குழந்தை பாக்கியம் அருளும் நெல்லுக்கடை மாரியம்மன்


இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, ‘கல்யாண தட்சிணாமூர்த்தி’ என்றே அழைக்கிறார்கள். அதாவது, திருமணம் தடைபடுபவர்கள் இவரை வழிபட, கூடிய சீக்கிரத்தில் திருமணம் நிகழும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக, இரண்டு அம்பாள் இருக்கும் கோயில் களத்திர தோஷ பரிகாரத் தலமாக விளங்கும். அந்த வகையில் இக்கோயிலும் களத்திர தோஷத்திற்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

அதாவது பல ஆண்டுகளாக இக்கோயில் வழிபாட்டில் இருந்து வந்த அன்னை அகிலாண்டேஸ்வரி விக்ரஹத்தின் ஒரு கரம் சேதம் அடைந்ததால் அதற்கு பதில் புதிதாக ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ய கோயிலுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அப்போது சில அமங்கலமான நிகழ்வுகள் ஏற்பட்டதால் பழைய விக்ரஹத்தை அப்புறப்படுத்தாமல் இரண்டு அம்பாள் விக்ரஹத்திற்கும் பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

மேலும், அம்மனின் பார்வை நவக்கிரகங்களின் மீது படுவது போல அமைந்திருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பைக் கூட்டுகிறது. அஷ்டம சனி தோஷம் இருப்பவர்கள் கவலை கொள்ளாமல் இங்கு வந்து அகதீஸ்வரரை வழிபட அனைத்து தோஷம் விலகி வாழ்க்கையில் வெற்றிகளை சந்திக்கலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US