குழந்தை பாக்கியம் அருளும் நெல்லுக்கடை மாரியம்மன்
அம்மன் என்றாலே சக்தி வாய்ந்தவள் தான்.சிவம் இல்லையே சக்தி இல்லை.சக்தி இல்லையே சிவம் இல்லை என்பது போல்.அம்மன் மக்களுக்கு துயர் தீர்ப்பவளாக பல அவதாரம் எடுத்து அருள் பாலிக்கின்றார்.
அப்படியாக நாகை மாவட்டமான நாகப்பட்டினத்தில் ஸ்ரீசௌந்திர ராஜ பெருமாள் வீதியில் நெல்லுக்கடை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.அந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது.
அந்த கோயில் தல வரலாற்றை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு அவதாரம் பின்னாடியும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கிறது அப்படியாக நாகப்பட்டிணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் , சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார்.
இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பொழுது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து , நெல் வேண்டும் என்று கேட்டார். அம்மையார்.
நெல்லை அளந்து கூடையில் வைத்து விட்டு , அதற்குரிய காசைவாங்க திரும்பிய பொழுது , அந்த பெண்மணியைக் காணவில்லை.
நெல்லும் அப்படியே இருந்தது. அன்று இரவு அம்மையாரின் கனவில் தோன்றிய அப்பெண்மணி உன் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் புற்றுருக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.
மறுநாள் அம்மையார் சென்று அவ்விடத்தைப் பார்க்க மரத்தடியில் அப்புற்றுக்கு மஞ்சள் , குங்குமம் இட்டு வழிபட்டு வந்தனர் மக்கள் . சில ஆண்டுகளுக்கு பின்னர் அம்மையாரின் வாரிசுகளால்.
மக்கள் வழிபட்ட மரத்தடியில் , அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்தார்கள் இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
பிரிந்த தம்பதியர் இந்த நெல்லுக்கடை அம்மனை வழிபட ஒன்று சேருவார்கள் என்று நம்பிக்கை.மேலும் குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு அம்மனே குழந்தையாக பிறப்பர் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |