இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29.03.2024)
இன்று சோபகிருது வருடம் பங்குனி மாதம் 16 ஆம் நாள்.
உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். எனவே அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துக்கொள்வது நல்லதாகும்.
மேலும் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியான பலன் அமைக்கின்றது என்று குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
சந்திராஷ்டம் இருப்பதால் வேலை பளு அதிகமாக இருக்கக்கூடும். தொழிலில் புதிய முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது. சிலர் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வருவதறகு வாய்ப்புகள் உண்டு. ஆதலால் எதையும் திட்டமிட்டு செய்யவேண்டிய நாளாக அமைந்து உள்ளது.
ரிஷபம்
நடந்திடாது என்று நினைத்த காரியம் ஒன்று சாதகமாக முடியும் சகோதர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவும். திருமணம் சம்பதமான பேச்சுகள் சாதகமா அமைய கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும் திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பர்வர்களால் நன்மைகள் உண்டாகும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல நாளாக இன்றைய நாள் அமைந்து உள்ளது.
கடகம்
மனதில் உற்சாகம் உண்டாகும் நாள். கணவன் மனைவி இடையே மன வருத்தங்கள் விலகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பொதுவாக தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும் நாள் .
சிம்மம்
நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உடன் பிறந்த சதோகர்களால் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்லவும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
புதிய முயற்சிகளை காலையிலே மேற்கொள்வது நல்லது. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் சிலருக்கு எதிர்ப்பாராத பணவரவுகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து உற்சாகத்துடன் காண்பீர்கள்.
துலாம்
மனதில் தெய்வபக்தி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும் பொது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை துணையால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் விலகும். காரியங்களில் அனுகூலம் உண்டானாலும் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. குடும்பத்தில் தேவையான செலவுகளை நிறைவேற்ற உதவி செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்சனைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.
தனுசு
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது சகோதர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை விலகி அன்யோன்யம் உண்டாகும். எதிர்ப்பார்த்த வரவுகள் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் வரும். மாலையில் நல்ல செய்தி வரும்.
மகரம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வைகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்ப்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவில் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
இன்றைய நாளில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும் பொழுது பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.
மீனம்
இன்றைக்கு புதிய முயற்சிகளை தவிர்த்து விடவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வாகனத்தில் செல்லும் பொது கவனம் தேவை.