இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(13/04/2024)

By Sakthi Raj Apr 13, 2024 04:06 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்,

மேஷம்

இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.வெளியூர் செல்லும் பயணம் லாபமாக அமையும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ரிஷபம்

உங்கள் அணுகுமுறைகளை பிறர் பாராட்டுவர்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.கூட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மேலும் உங்கள் பேச்சு திறமையால் சில பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்

வேலை பளுவால் மனம் சோர்வடையும்.நினைத்தது நிறைவேற்ற முடியாமல் போகும்.செலவு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவுக்கு வராமல் போகும். முயற்சியில் தடை உண்டாகலாம்.அதனால் எதையும் யோசித்து செயல்படுவது நல்லது.

கடகம்

வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.புதிய முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். உங்கள் செயல்கள் வெற்றிகரமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் .வருமானத்திற்காக திட்டமிடுவீர்கள். நேற்று வரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும் .பொருளாதார நெருக்கடிகள் விலகும்.வராமல் இருந்த பணம் வந்து சேரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

தமிழ் வருட பிறப்பு அன்று நாம் என்ன செய்ய வேண்டும்

தமிழ் வருட பிறப்பு அன்று நாம் என்ன செய்ய வேண்டும்


கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த முயற்சி ஒன்று உங்கள் பேச்சு சாமர்த்தியத்தால்அதில் தீர்வு காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று மனதில் எழுந்த குழப்பம் விலகும்.எதிலும் யோசித்து செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.நேற்று இருந்த நெருக்கடிகள்விலகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். வாழ்க்கை துணையுடன் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும் செயல்களில் லாப நிலை உண்டாகும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும் .தடைப்பட்டு இருந்த முயற்சிகள் லாபம் உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்டு இருந்த செயல்கள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும் .குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்து லாபம் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் முயற்சிகள் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் நிறைவேறாமல் இருந்த முயற்சிகள் நிறைவேறும். நிதிநிலை உயரும். குடும்ப சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் பேசி தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணம் இன்று உங்களை வந்தடையும்.

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். துணிவுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US