இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (14.06.2024)
மேஷம்
மேஷ ராசி நேயர்கள் இன்று திட்டமிட்ட படி செயல்களை செய்து முடிப்பீர்கள்.மனதில் உள்ள குழப்பங்கள் விலகி உற்சாகம் பிறக்கும்.குடும்பத்தில் இருந்த வந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான நாள்.வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்காது.எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியலாம்.ஆக சற்று எதையும் சற்று கவனமாக கையாள வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று செய்த பிழையை உணரும் நாள்.மனம் வருந்தி சில விஷயங்களை மாற்றி கொள்வீர்கள்.இருப்பினும் உத்யோகத்தில் உற்ச்சாகமாக செயல்படுவீர்கள்.புத்துணர்ச்சியான நாள்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுக்க கூடும்.புதிய தொழில் முயற்ச்கிகளில் ஈடுபடும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று சற்று குழப்பமான நாள்.வியாபாரம் மந்தமாக காணப்படும்.வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகலாம்.மனதில் செய்வதறியாது குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதால் நிதானமாக செயல் படுவது நன்மை உண்டாக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய அன்பரகள் அறிமுகம் நன்மை உண்டாக்கும்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.எதிர்ப்பாராத செலவுகள் ஏற்படலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு நிதானமாக செயல்படுவதால் காரியத்தில் வெற்றியை சந்திப்பீர்கள்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவீர்கள்.இன்றைய நாள் உற்சாகமான நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலத்தை பற்றிய கவலைகள் உண்டானாலும் எதையும் பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும்.பொருளாதார நெருக்கடிகள் விலகும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருந்தாலும் மனதின் ஓரத்தில் சிறு கவலை மேலோங்கி நிற்கும்.பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் இனம் புரியாத கவலை ஆட்கொள்ளும் நாள்.கவனம் அவசியம்.
மகரம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும்.திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று மனதில் குழப்பமும் சந்தோஷமும் ஒரு சேர குடிகொள்ளும் நாள்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று மனதில் புது உத்வேகம் பிறக்கும்.நீண்ட நாள் பண பிரச்சனைக்கு நல்ல தீர்வு பிறக்கும் .குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |