பகவத் கீதை: நல்ல மனிதர்கள் ஏன் அதிக அளவில் துரோகத்தை சந்திக்கிறார்கள்
மனிதர்கள் சந்திக்ககூடாத விஷயங்களில் துரோகமும் ஒன்று. இந்த துரோகம் ஒரு மனிதனுக்கு மரணத்தை விட பெரிய அளவிலான வேதனையை கொடுத்து விடும். அப்படியாக, இந்த துரோகம் பெரும்பாலும் நல்ல மனிதர்களுக்கே நடக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
அதாவது இந்த உலகத்தில் நல்ல மனிதராக மட்டும் இருந்து பயன் இல்லை. நாம் எப்பொழுதும் நல்ல மனதோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணர் சொல்கிறார், இந்த உலகம் ஒரு பொழுதும் உணர்வு ரீதியாக செயல்படுவதில்லை.
அவை கர்மவினைகளின் வழியாகவே செயல்படுகிறது. ஆதலால், நல்ல மனதோடும் கண்மூடித்தனமான நம்பிக்கையோடும் பிணைப்போடும் பழகும் பொழுது அங்கு ஆபத்துகளே காத்திருக்கிறது.
மேலும், நாம் ஒருவரை மிகவும் நெருக்கமாக வைத்து பழகும் பொழுது அவர்களின் கெட்ட செயல்களை நாம் பார்க்க தவறி விடுகின்றோம்.
நம்முடைய அன்பு அவர்களின் தவறுகளை கடந்து அவர்களிடம் நிற்பதால் திடீர் என்று அவர்கள் ஏமாற்றும் பொழுது நாம் மிகவும் வேதனைக்கு ஆளாகின்றோம். ஆதலால், நெருக்கமாக ஒருவரிடம் பழகுவதை விட எவ்வளவு விழிப்புணர்வோடு பழகுகின்றோம் என்பதே முக்கியமானதாகும்.
அதே போல் நம்முடைய எதிர்பார்ப்புகளும் சமயங்களில் துரோகமாக மாறுகிறது. அதாவது நாம் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பாராமல், செய்யவேண்டும். எதிர்பார்ப்புகளோடு செய்யும் பொழுது அங்கு காயமே மிஞ்சுகிறது. எதிர்பார்ப்புகள் பிரிவுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், நம்முடைய தர்மத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எப்பொழுதும் நம்மை அவமரியாதை செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது நாம் அந்த இடத்தை விட்டு விலகுவதே சிறந்தது.
மனிதர்கள் எப்பொழுதும் மன்னிக்கும் குணம் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், நம்முடைய மன்னிப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் அதர்மத்தை கையில் எடுத்து செயல்படுவதை ஒரு பொழுதும் நாம் அனுமதிக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |