செலவே இல்லாத சக்தி வாய்ந்த யாகம்- எது தெரியுமா?

By Sakthi Raj Dec 12, 2025 07:08 AM GMT
Report

  யாகம் என்பது நம்முடைய வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் விலகி மற்றும் நாம் நினைத்தது நிறைவேற இறைவனுடைய அருள் பெறுவதற்காக நடத்தக்கூடிய ஒரு பூஜை வழிபாடாகும். மேலும், ஒவ்வொரு ஒரு  யாகம் செய்ய அதற்கு பல விஷயங்கள் தேவைப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் நிறைய செலவுகளை நாம் இந்த யாகத்திற்காக செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அப்படியாக காசே செலவில்லாமல் எல்லா யாகங்களும் நடத்திய பலனை ஒரு மனிதன் பெற வேண்டும் என்றால் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

மனிதர்களே மனிதர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாத நிலையில் கண்ணனை தன்னுடைய காதலனாக கொண்டு, தன்னுடைய தோழிகளை ஆயர்பாடி பெண்களாக கருதி, ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாக கருதி கண்ணன் ஒரு நாள் என் காதலை புரிந்துக் கொண்டு திருமணம் செய்ய வருவார் என்று தீர்க்கமான நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார் ஆண்டாள்.

செலவே இல்லாத சக்தி வாய்ந்த யாகம்- எது தெரியுமா? | Benefits Of Chanting Aandal Thirupavai In Maragzhi

இந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தால் எல்லாம் தேடி வருமாம்

இந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தால் எல்லாம் தேடி வருமாம்

அதோடு ஆண்டாள் கண்ணனை நினைத்து மார்கழி முப்பது நாளும் திருப்பாவை பாடி அருளிச் செய்தால். திருப்பாவை என்பது ஆண்டாளை போலவே மிகவும் வலிமையானது. எவ்வாறு ஆண்டால் கண்ணன் ஒருநாள் கட்டாயம் என்னை வந்து திருமணம் செய்து கொள்வார் என்று தீர்க்கமாக தவம் இருந்து திருப்பாவை பாடினாலோ அத்தனை வலிமையும் அந்த திருப்பாவையில் புதைந்து கிடக்கிறது.

ஆக எவர் ஒருவர் திருப்பாவையை பாடுகிறார்களோ அவர்களுக்கு நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும். திருப்பாவை பாடுபவர்கள் தவம் இருந்து ஒரு வேண்டுதலை வைப்பதற்கு சமம் ஆகிறது. அப்படியாக திருப்பாவையும் ஒரு யாகத்தை போல் தான். வேதத்தின் சாரத்தையே திருப்பாவையாக்கி தந்தருளிக்கிறாள் ஆண்டாள்.

சனியின் வீட்டில் இணையும் 3 கிரகங்கள்- திரிகிரக யோகத்தால் யாருக்கு அதிர்ஷ்டம்?

சனியின் வீட்டில் இணையும் 3 கிரகங்கள்- திரிகிரக யோகத்தால் யாருக்கு அதிர்ஷ்டம்?

மேலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு யாகம் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். அதாவது ஒருவர் அஸ்வமேத செய்தாலோ, மழை வேண்டி, திருமணம் வேண்டி என்று என்ன வேண்டுதல் வைத்து யாகம் செய்கின்றமோ அந்த யாகம் செய்த பலன் கிடைக்கும்.

ஆனால் திருப்பாவையில் வருகின்ற 30 பாடல்களையும் பாடினால் எல்லா யாகத்தையும் செய்த பலனை அந்த மந்திரம் நமக்கு கொடுத்து விடுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருப்பாவையை யாரேனும் படிக்காமல் இருக்க முடியுமா? மார்கழி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அன்று பிறக்க இருக்கிறது.

செலவே இல்லாத சக்தி வாய்ந்த யாகம்- எது தெரியுமா? | Benefits Of Chanting Aandal Thirupavai In Maragzhi

அன்று தொடங்கி ஜனவரி 13ஆம் தேதி வரை ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஆண்டாள் பாடிய திருப்பாவையே பாடி வழிபாடு செய்து வந்தால் அவர்கள் மனதில் நினைத்த அத்தனை காரியமும் அவர்கள் கண் முன்னே ஆண்டாளின் அருளால் நடப்பதை காணலாம்.

ஆக ஆண்டாளுடைய திருப்பாவைக்கு இத்தனை மகிமையும் இத்தனை சக்தியும் இருக்கிறது. ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக ஆண்டாளை சரணடைந்து அவள் பாடிய திருப்பாவையை பாட வேண்டும்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் நாம் இந்த திருப்பாவையை கற்றுக் கொடுத்து அதற்குரிய பொருளை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கும் பொழுது ஆண்டாளின் பரிபூர்ண அருள் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US