2026: ஆடி கிருத்திகை எப்பொழுது ? இந்த விஷயங்களை செய்ய தவறாதீர்கள்

By Sakthi Raj Aug 05, 2026 06:05 AM GMT
Report

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும், பாம்பன் சுவாமிகள் இயற்றிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மிக முக்கியமான இலக்கியம் என்று சொல்லப்படுகிறது.

மேலும், பஞ்சாமிர்த வண்ணம் என்றால் என்னவென்று பார்க்கின்ற பொழுது பஞ்சாமிர்தத்தில் உள்ள ஐந்து பொருட்கள் பால், தயிர், நெய் சர்க்கரை, தேன் ஆகியவை ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியை குறிக்கின்றன.

சாதாரண மனநிலை பாலாக தொடங்கி பயிற்சியின் மூலம் இறுதி இனிமையாக தேனாக இறைநிலையை நமக்கு வழங்குவதாக இது விளக்குகிறது. மேலும், நாம் முருகப் பெருமான் பாடல்களை பாடும் போது ஏற்படும் ஒலிகள் மற்றும் அதிர்வலைகள் ஒருவர் உள்ளே முருகப்பெருமான் இருப்பை உணர செய்கின்றது.

உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

இது யோகிகள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் இறைவனை அடைவதற்கு உதவக்கூடிய ஒரு வழியாக உள்ளது. அதோடு ஜோதிட ரீதியாக பஞ்சாமிர்த வண்ணத்தில் ஒவ்வொரு பகுதியும் கிரகங்களின் தாக்கங்களை சரி செய்யக்கூடியதாக உள்ளது.

வாழ்க்கையில் தடைகளை சந்திப்பவர்கள் கட்டாயம் இதனை பாராயணம் செய்வதன் வழியாக ஒரு நல்ல பலனை பெறலாம். மேலும், ஆடி கிருத்திகை அன்று பஞ்சாமிர்த வண்ணத்தை பாடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

இதை உண்மையான பக்தியுடன் நாம் பாடும் பொழுது நமக்கு முருகப்பெருமான் அருள் எப்பொழுதும் துணையாக நின்று வழிநடத்தும் என்று சொல்கிறார்கள். அப்படியாக, மேலும் ஆடி கிருத்திகை பற்றிய சிறப்புகள் மற்றும் பற்றி பல்வேறு தகவல்களை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US