நினைத்ததை சாதிக்க 2025 மஹாசிவராத்திரி விரதம் இருக்கும் முறை
சிவபெருமானின் மிக முக்கியமான நாளாக மஹாசிவராத்திரி திகழ்கிறது.இந்த மஹாசிவராத்திரி மாசி மாதம் வரும் முக்கிய நிகழ்வாகும்.இந்த மஹாசிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.அப்படியாக 2025 மஹாசிவராத்திரி எப்பொழுது?விரதம் இருக்கும் முறை என்ன என்று பார்ப்போம்.
ஒருவர் அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் கவலைகள் தீரவும்,நினைத்ததை சாதிக்க மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.மேலும்,எவர் ஒருவர் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு முழுவதும் சிவபெருமானை வழிபாடு செய்ததற்கான அருள் கிடைக்கும்.
இந்த ஆண்டு, மகாசிவராத்திரி விரதம் பிப்ரவரி 26, 2025 அன்று வருகிறது. சதுர்தசி திதி பிப்ரவரி 26, 2025 அன்று காலை 11:08 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 27, 2025 அன்று காலை 08:54 மணிக்கு முடிவடைகிறது. இந்த மஹாசிவராத்திரி என்பது நாம் நம்மையே சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கொள்ளும் முக்கியமான நிகழ்வாகும்.
சிவ பெருமானை வழிபட தொடங்கினால் அவர்கள் வாழ்க்கையில் முக்தி கிடைக்கிறது.அதோடு தெரியாமல் செய்த பாவத்திற்கான விடுதலை கிடைக்கிறது.மகாசிவராத்திரி நாள் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்ட நாளாகவும் கருதப்படுகிறது.
சிவலிங்கத்தை பால், தண்ணீர் மற்றும் தேனில் நீராடி, கோயில்களை விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிப்பார்கள். ஒருவர் இறைவனை சரண் அடைய இந்த மஹாசிவராத்திரி திருநாளை போல் எந்த நாளும் இல்லை.அன்றைய நாள் விரதம் இருந்து,தியானம் செய்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நம் உடலும் உயிரும் மேன்மை அடையும்.அதோடு நாம் பிரபஞ்சத்துடன் ஆழமான தொடர்பை அனுபவிக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |