கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: என்ன தெரியுமா?
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது சிறந்தது.
இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஏனெனில் இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம்.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே தீபம் ஏற்றிவிட வேண்டும்.
குறிப்பாக, பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவதால், புண்ணையும் சேரும்.
மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
மேலும், திண்ணையில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.
திருக்கார்த்திகை தினம் அன்று வீட்டு முற்றத்தில் 4, சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2, நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.
இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |