யானை முடி மோதிரம் யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?
மனிதர்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பல சூழ்நிலைகளில் எதிர்பாராமல் வந்துவிடுகிறது. சில நேரங்களில் அவை குடும்ப கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் அவை பொருளாதார இழப்புகளாக இருக்கிறது.
இப்படியாக மனிதர்கள் வாழ்க்கையில் மாறி மாறி அவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அவர்கள் பல்வேறு வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்கிறார்கள்.
அதில் ஒரு முக்கிய பரிகாரமாகவும் அவர்களுடைய பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஒரு முக்கிய பொருளாகவும் யானை முடி கொண்டு செய்த மோதிரம் உள்ளது. இதை அணிவதால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனை விரைவில் தீர்ந்து விடுவதாக நம்புகிறார்கள்.
அப்படியாக யானை முடி மோதிரத்தை நாம் அணியலாமா? அவ்வாறு அணிய விரும்புபவர்கள் எந்த கைகளில் எந்த விரல்களில் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். நவக்கிரகங்களில் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அதிலும் குரு பகவானுடைய வாகனம் யானையாக கருதப்படுகிறது. அதோடு தங்கமும் குரு பகவானுக்கு உகந்தது என்பதால் அவை இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது.
அந்த வகையில் ஒருவர் தங்களுடைய பிரச்சனைகள் முழுமையாக தீர முதல் முதலாக யானை முடி கொண்ட மோதிரத்தை அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமையில் வரக்கூடிய குரு ஓரையில் குறிப்பாக வளர்பிறையில் இந்த மோதிரத்தை அணிவது அவர்களுக்கு சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
இந்த மோதிரத்தை வலது கைகளிலும் பெண்கள் இடது கைகளிலும் அணியலாம். குறிப்பாக ஜோதிடர்கள் இந்த மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும் என்கிறார்கள். மேலும் யானை முடி மோதிரம் அணிவதால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது.
அதிலும் முக்கியமாக நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளும் நமக்கு ஏற்படுகின்ற கண் திருஷ்டிகளும் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்கிறது. அதோடு யானை மோதிரம் அணிந்திருப்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் போன்ற எந்த தாக்கங்களும் அவர்களை எதுவும் செய்யாது என்றும் சொல்கிறார்கள்.
சிலர் இயற்கையாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்து யானை முடி மோதிரத்தை அணியும் பொழுது அவர்களுக்கு மனதில் தைரியம் பிறக்கிறது. யானை முடி மோதிரத்தை அணிந்திருப்பவர்கள் அவ்வப்போது சாம்பிராணி தூபம் காண்பிப்பது சிறப்பை கொடுக்கும்.
இந்த யானை முடியானது யானைகளை துன்புறுத்தாமல் எடுக்கக்கூடிய ஒரு பொருளாக இருந்தாலும் இதற்கு லைசென்ஸ் பெற்றே எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







