நினைத்த காரியம் உடனே கை கூட ஞாயிற்றுகிழமை நாம் செய்யவேண்டியவை

By Sakthi Raj Sep 22, 2024 07:00 AM GMT
Report

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை இருக்கிறது.அந்த முறையில் நாம் அந்த தெய்வங்களை வழிபட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்படும்.அந்த வகையில் உலகிற்கே ஒளி தருபவர் சூரிய பகவான்.இவரை வழிபட உகந்த நாள் ஞாயிற்று கிழமை.

அன்றைய நாளில் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட எதிரிகள் தொல்லை நீங்கி வாழ்க்கையில் என்றும் பிரகாசம் நிலவும். அப்படியாக சூரிய பகவானை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

சகல செல்வங்களையும் ஆற்றலையும் பெற உதுவுகிறது சூரிய பகவானின் விரதம்.இதனை சூரிய விரதம் என்பர்.

இவருக்கு உகந்த ஞாயிற்று கிழமையில் சூரியபகவானை மனதார நினைத்து வேண்டி சூரிய விரதம் இருக்க வாழ்க்கையில் தடங்கல் என்ற சொல்லிற்கே இடம் இல்லை.

நினைத்த காரியம் உடனே கை கூட ஞாயிற்றுகிழமை நாம் செய்யவேண்டியவை | Benifits Of Sunday Suriya Bagavan Worship

இந்த சூரிய விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராட வேண்டும்.

பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தம் செய்து அர்ச்சனைக்கு ஒரு தட்டை தயார் செய்து, அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று கிருத்திகை முருக பெருமானுக்கு நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை

இன்று கிருத்திகை முருக பெருமானுக்கு நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை


விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளிக்க வேண்டும்.

பூஜை முடிந்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டியது ஏதேனும் இனிப்பு வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

நினைத்த காரியம் உடனே கை கூட ஞாயிற்றுகிழமை நாம் செய்யவேண்டியவை | Benifits Of Sunday Suriya Bagavan Worship

காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, சாப்பிட்டு விட வேண்டும்.இவ்வாறு ஒருவர் சூரிய விரதம் கடைபிடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.

அத்தகைய மகத்துவம் வாய்ந்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம். ஆக வாழ்க்கையில் பயம் கொண்டு எதிரிகளை நினைத்து கவலை கொள்ளாமல் சூரிய பகவானை சரண் அடையுங்கள்.

அவர் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக ஆக்குவதோடு உங்கள் வளர்ச்சியை அவர் மேம்படுத்துவர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US