நீங்கள் பிறந்த தேதி இதுவா.. உங்கள் அதிர்ஷ்ட நாள் இதுதானாம்
இறைவழிபாட்டில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகஇருக்கிறது. அதாவது ஒருவர் விரதம் இருப்பது என்பது தவமிருந்து இறைவனை சரண் அடைவதற்கு சமமான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய உடலும் மனமும் தெளிவடைந்து ஒரு நல்ல நேர்மறை ஆற்றலை பெறுகிறது.
அப்படியாக ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட நாள் அதிர்ஷ்ட நாளாக இருக்கும். அந்த நாளில் அவர்கள் விரதமிருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் கேட்ட வரம் உடனடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.

எண் 1, 10, 19, 28:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகம் சூரிய பகவான். ஆதலால் இவர்கள் ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் நினைத்த காரியம் உடனடியாக நடக்கும்.
எண் 2, 11, 20, 29:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக சந்திரன் இருக்கிறார். ஆக இவர்கள் பௌர்ணமி தினங்களில் சத்திய நாராயண பகவானை வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதியும் பொருளாதார முன்னேற்றமும் இருக்கும்.
எண் 3, 12, 21, 30:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக குரு பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து குரு பகவானை வழிபாடு செய்தால் குரு தோஷங்கள் யாவும் விலகி நன்மை உண்டாகும்.
எண் 4, 13, 22, 31:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக ராகு இருக்கிறார். ஆக இவர்கள் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபாடு செய்வதும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் இவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றமாக அமையும்.
எண் 5, 14, 23:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் தடைகள் எல்லாம் விலகும்.
எண் 6, 15, 24:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை சரண் அடைந்தால் மட்டுமே பொருளாதார நிலையானதாக இருக்கும்.
எண் 7, 16, 25:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக கேது பகவான் இருக்கிறார். இவர்களுக்கு தடைகள் விலக விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யலாம்.
எண் 8, 17, 26:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அனுமனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் விலகும்.
எண் 9, 18, 27:
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் அனுமன் மந்திரங்கள் பாராயணம் செய்து செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |