இந்த திசையில் மனை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்
ஜோதிடத்தில் வாஸ்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது வாஸ்து சரியாக அமைந்து விட்டால் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டம் என்று பல பல உயரத்திற்கு சென்று விடும். ஆனால் வாஸ்து சரி இல்லை என்றால் நிச்சயம் அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் நாம் சிக்கல்களை சந்திக்கக்கூடும்.
அதே சமயம் வாழ்க்கையில் அடுத்தடுத்து சரிவுகளையும் சந்திக்க கூடும். அதனால் வாஸ்து மிகவும் முக்கியமானதாக நம்முடைய வாழ்க்கையில் உள்ளது. அப்படியாக, நாம் வீடு வாங்கும் பொழுது எந்த மாதிரியான மனை வாங்க வேண்டும் என்று குழப்பங்கள் எல்லோருக்கும் இருக்கும்.
ஒருவர் வீடு வாங்கும் பொழுது அந்த மனை சம நிலையாக இருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், ஒருவர் மனை வாங்கும் பொழுது நான்கு பக்கங்களும் ரோடு இருப்பது போல் மனை வாங்கினால் அவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்.
அதேபோல் கோவில் இருக்கும் பகுதிகளில் நம் வீடு கட்டலாமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். கோவில் இருக்கும் இடத்தில் கட்டாயம் வீடு கட்டலாம். அதுவும் சரியான வாஸ்து அமைப்புகளை கொண்டு மதில் சுவர்களை எழுப்பி நம் வீடுகளை கட்டும்போது நிச்சயம் நல்ல கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் தெரு மூலையிலும் வீடு கட்டுவது உகந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது. அப்படியாக வாஸ்து ரீதியாகபல்வேறு முக்கிய தகவல்களை நமது பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் டாக்டர் அசோகன் அவர்கள். அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |