பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ

By Sakthi Raj Nov 22, 2026 12:54 PM GMT
Report

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் அவன் தினமும் எழுந்தவுடன் செய்கின்ற காரியத்தை பொறுத்தே அமைகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் எப்படி துவங்குகிறதோ அதுவே நம்முடைய மனநிலையிலும் செயல்பாடுகளிலும் தாக்கத்தை உண்டு செய்கிறது.

ஆதலால், காலையில் எழுந்த உடனே அவசர அவசரமாக வேலைகளை தொடங்குவதற்கு பதிலாக சில நிமிடங்கள் இறைவனை நினைத்து நன்றியுடன் அந்த நாளை துவங்குவது நன்மையை கொடுக்கும்.

இதைக் குறித்து பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஒரு அற்புதமான அறிவுரையை வழங்குகிறார்.

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ | Bhagavad Gita Morning Success Secrets

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை – அத்தியாயம் 8, ஸ்லோகம் 7:

"தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்ய ச" பொருள்: அதாவது ஒரு மனிதன் எந்த செயல்களை செய்தாலும் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டே அவனுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதை குறிக்கக் கூடியதாகும்.

இந்த ஸ்லோகத்தின் வழியாக பகவான் கிருஷ்ணர் உணர்த்துவது இறைவனை நினைப்பதற்காக நம்முடைய அன்றாட கடமைகளை ஒதுக்கி விட வேண்டும் என்ற ஒரு அவசியம் இல்லை. கடமையில் தான் இறைவன் இருக்கின்றான்.

ஆக, நம்முடைய செயல்களை செய்கின்ற பொழுது மனதில் இறை நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இவை குறிக்கிறது.

கடமையை செய்யாமல் இறைவனை மனதில் நிறுத்தி பிரார்த்திப்பது என்பது இறைவனிடம் நெருக்கமாக நம்மை அழைத்து செல்வதில்லை. ஒவ்வொரு மனிதனும் தினமும் அவனுடைய கடமையை செய்யாமல் தவறாமல் செய்வதோடு செய்கின்ற வேலையில் எப்பொழுதும் இறைவனை மறக்காமல் இருக்க வேண்டும்.

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ | Bhagavad Gita Morning Success Secrets

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

ஆகவே, காலை எழுந்ததும் சில நிமிடங்கள் அமைதியாக நேரத்தை ஒதுக்கி இறைவனை நினையுங்கள். நமக்கு கிடைத்திருக்கக் கூடிய வாழ்க்கைக்கும் சொந்தங்களுக்கும் உறவுகளுக்கும் நன்றி சொல்லுங்கள்.

அந்த நாளில் யாருக்கும் தீங்கு செய்யாமல் முடிந்த உதவிகளை செய்தும் நல்ல சொற்களை பேசியும் கடமையை தவறாமல் செய்வேன் என்றும் மனது உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதோடு, ஒரு நாளை நல்லதாக மாற்றுவது என்பது காலையில் செய்யக்கூடிய இறை வழிபாடல் மட்டும் அல்ல. அந்த நாள் முழுவதும் நாம் செய்யக்கூடிய செயல்களும் நம்முடைய எண்ணங்களும் பொறுத்து அமைகிறது. ஆக, நல்ல செயல்களை செய்வோம் தர்மம் தவறாமல் வாழ்வோம். இறைவன் அருளால் வெற்றி பெறுவோம்.  

குறிப்பு:

இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது. 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US