புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா?

By Manchu Jun 17, 2026 04:08 AM GMT
Report

புதன் வக்ர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதன் வக்ர பெயர்ச்சி

கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன், புத்தி கூர்மை, பேச்சாற்றல், வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாகவும் இருக்கின்றார். பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சியை மிக முக்கியமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் ஜுன் 29 அன்று இரவு 11.05 மணிக்கு புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடைகின்றார். இந்த பெயர்ச்சியானது ஜுலை 24 அதிகாலை 4.27 மணி வரை நடைபெறுகின்றது.

இதனால் சில ராசியினருக்கு கூடுதல் நன்மை கிடைக்குமாம். அந்த ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம். 

புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா? | Budhan Vakra Peyarchi 2026 Lucky 4 Zodiac Sign

2026: சூரிய கிரகணத்தன்று செவ்வாய் பெயர்ச்சி..3 ராசிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறதாம்

2026: சூரிய கிரகணத்தன்று செவ்வாய் பெயர்ச்சி..3 ராசிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறதாம்

மேஷம்

மேஷ ராசியின் 4வது வீட்டில் வக்ர பெயர்ச்சி நடைபெறுவதால் அலுவலகத்தில் சாதகமான சூழல், மேலதிகாரிகளின் பாராட்டு, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதுடன், திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் எதிர்பார்த்த லாபத்தினை அள்ளித்தரும்.

புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா? | Budhan Vakra Peyarchi 2026 Lucky 4 Zodiac Sign

2026: ஜூலை மாதம் மேஷ ராசிக்கு முடிவிற்கு வரும் 3 பிரச்சனைகள்.. என்ன தெரியுமா?

2026: ஜூலை மாதம் மேஷ ராசிக்கு முடிவிற்கு வரும் 3 பிரச்சனைகள்.. என்ன தெரியுமா?

கடகம்

கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் இரட்டிப்பு மகிழ்ச்சி வருவதுடன், வருமானமும் அதிகரிக்கும். இதனால் எதிர்கால சேமிப்பு அதிகரிக்கும்.

பரம்பரை சொத்துக்கள் கை வந்து சேர்வதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுமாம். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கடின உழைப்பிற்கு ஏற்ப பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், வேலையில் அபார வெற்றியையும் பெறுவீர்கள்.

புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா? | Budhan Vakra Peyarchi 2026 Lucky 4 Zodiac Sign

விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் 9ம் வீட்டில் புதன் வக்ர பெயர்ச்சி நடைபெறுவதால், நிதி நிலைமை அசுர வேகத்தில் வலுவடையுமாம்.

நீண்ட நாட்களாக கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கடன் பிரச்சனை முற்றிலும் முடிவிற்குவருவதுடன், வியாபாரிகளுக்கு இவை பொற்காலமாக இருக்குமாம்.

வேலையில் புதிய பொறுப்புகள், சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைப்பதுடன், குடும்ப பிரச்சனைகள் நீங்குவதுடன், மனநிறைவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா? | Budhan Vakra Peyarchi 2026 Lucky 4 Zodiac Sign

மீனம்

மீன ராசியில் 5ம் வீட்டில் புதன் வக்ர பெயர்ச்சி நடைபெறுவதுடன், படிப்பில் பெரிய சாதனைகளையும், வெற்றியையும் பெற முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் நினைத்த காரியம் கைகூடும். ஆரோக்கியம் மேம்படுவதுடன், எதிர்பாராத பண வரவு மற்றும் நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

புதன் வக்ர பெயர்ச்சியால் பணமழையில் நனையும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா? | Budhan Vakra Peyarchi 2026 Lucky 4 Zodiac Sign

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US