வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளசி செடி வளர்க்கலாமா?
ஜோதிட சாஸ்திரத்தில் துளசி மஹாலக்ஷ்மியின் அம்சமாக பார்க்க படுகிறது.எவர் ஒருவர் வீட்டில் துளசி செடி வைக்கிறார்களோ அவர்கள் வீட்டில் அம்பாளின் அருளால் வீட்டில் நேர்மறை சக்திகள் பெருகி செல்வம் நிலைத்திருக்கும்.
அப்படியாக பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்.அதில் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளசி செடியை வளர்க்கலாமா என்பது தான்.அதை பற்றி பார்ப்போம்.
நாம் வீட்டில் துளசி செடியை கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் நடுவது தான் நல்ல பலன்களை தரும்.மேலும் துளசி செடியும் அதை சுற்றி உள்ள பகுதியும் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
நாம் எப்பொழுதும் துளசி செடி அருகில் காலணிகள் கழட்டி வைப்பது கூடாது.பெரும்பாலான வீடுகளில் துளசி செடி என்றால் ஒன்று என்ற எண்ணிக்கையில் தான் இருக்கும்.
அதிக இடம் இருக்கிறது அதிக அளவில் துளசி செடி வளர்க்க விரும்பினால் நிச்சயம் செய்யலாம்.ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.ஜோதிட சாஸ்திரப்படி துளசி 3,5,7 என்ற எண்ணிக்கையில் நாட வேண்டும்.
துளசி செடி எத்தனை வைத்தாலும் அதை முறையாக பராமரிப்பது அவசியம்.ஒரு பொழுதும் துளசி வாடி காணக்கூடாது.மேலும்,ஒருவர் ஞாயிற்று கிழமை மற்றும் ஏகாதசி நாட்களில் துளசி செடியை தொடக்கூடாது.
அதாவது நாம் துளசி செடியை மஹாலக்ஷ்மியின் அம்சமாக பார்த்து வழிபடுகின்றோம்.அம்பாள் விஷ்ணுவுக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பாள் என்று நம்பப்படுகிறது.ஆதலால் இந்த நாளில் துளசி செடியை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |