உலகத்தில் ஒருவர் வாங்கவே கூடாத சாபம் என்ன தெரியுமா?
இந்த பிரபஞ்சத்தில் வார்த்தைகளுக்கு அதிக அளவு வலிமை இருக்கிறது. அதாவது நம்மை சுற்றி எப்பொழுதும் ததாஸ்து தெய்வங்கள் இருப்பார்கள். அவர்கள் நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு அவ்வப்போது அப்படியே நடக்கட்டும் என்று அருள் புரிவார்கள்.
அந்த வகையில், மனிதர்கள் எப்பொழுதுமே அவர்களுடைய மனநிலை நேர்மறையான சிந்தனை கொண்டே இருப்பதில்லை. சமயங்களில் பல துரோகத்தினால் அவர்கள் மனம் வருந்தி எதிர்மறையான வார்த்தைகள் சொல்வதும் உண்டு. அதாவது ஒருவரை பார்த்து ஒருவர் சாபம் கொடுக்கக் கூடிய நிலையை அந்த மன வலியானது நம்மை தள்ளி விடுகிறது.
இந்த சாபமானது நிச்சயம் ஒருவர் மிகவும் பெரிய அளவில் மன வலியில் கொடுக்கிறார் என்றால் அது பலித்து விடுகிறது. அப்படியாக எந்தெந்த சாபம் என்னென்ன தோஷங்களை கஷ்டங்களை நமக்கு கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

1. ஒருவருக்கு பெண் சாபம் ஏற்படுகிறது என்றால் நிச்சயம் அவர்கள் வம்சம் தழைப்பது இல்லை என்று சொல்கிறார்கள்.
2. சர்ப்பதோஷம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் நிலையான சந்தோஷமும், வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல புரிதலும் ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால் திருமணத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும்.
3. குடும்பத்தில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால் அந்த குடும்பம் பித்ரு சாபம் பெற்று இருக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
4. ஒருவருக்கு கங்கையின் சாபம் இருந்தால் அவருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்படும்.
5. ஒருவருக்கு பூமி சாபம் இருந்தால் கைகளில் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர்களால் ஒரு நிலத்தை வாங்க முடியாது.

6. தேவர்களுடைய சாபம் இருந்தால் உறவினர்களுடைய ஆதரவும் அரவணைப்பும் இல்லாமல் தனித்து நிற்கக்கூடிய நிலையை கொடுத்து விடும்.
7. விருட்ச சாபம் இருந்தால் கடன் தொல்லை அதிக அளவில் நமக்கு நெருக்கடியை கொடுத்து விடும்.
8. ரிஷப சாபம் இருந்தால் யாருமே இல்லாமல் ஆதரவற்று இருக்கக்கூடிய நிலை இருக்கும்
9. பிரம்மனுடைய சாபம் இருந்தால் சரியான கல்வி நமக்கு அமைவதில்லை.
10. குலதெய்வ சாபம் இருந்தால் நம் வாழ்க்கையில் ஒரு நொடி கூட சந்தோஷமாக வாழ முடியாத நிலையை கொடுத்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |