சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம்

By Sakthi Raj Aug 28, 2026 09:12 AM GMT
Report

ஆச்சாரிய சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதிகளை வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அவர் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.

அந்த வகையில், நல்ல வாழ்க்கை முறை சமுதாயத்தில் நல்ல பெயர் பெறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று சில வழிகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார். அப்படியாக, நாம் குறிப்பிட்ட சில 3 விஷயங்களை செய்த பிறகு நிச்சயம் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம் | Chanakya Advise On Take Bath After Doing 3 Things

சர்ப்பத்தை வழிபாடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.. வழிபாடு செய்யும் முறை என்ன?

சர்ப்பத்தை வழிபாடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.. வழிபாடு செய்யும் முறை என்ன?

1. எண்ணெய் தேய்த்த பிறகு:

சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் உடம்பில் எண்ணெய் தேய்த்த பிறகு அல்லது மசாஜ் செய்த பிறகு குளிப்பது மிக மிக அவசியம். எண்ணெய் தேய்க்கும் பொழுது உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருக்கலாம்.

சரும துளைகளை அடைத்து வெளியில் உள்ள தூசியை உடலில் ஒட்ட செய்துவிடும். அதனால், நாம் எண்ணெய் தேய்த்து சிறிது நேரத்தில் குளித்தால் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கி முதல் புத்துணர்ச்சி பெறும்.

2.மயானத்திலிருந்து திரும்பிய பிறகு:

இந்துமத சாஸ்திரப்படி ஒருவர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மயானத்திலிருந்து வீடு திரும்பியதும் குளிப்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. சடலம் எரியும் இடத்தில் புகை மற்றும் பல நுண்ணிய பாக்டீரியாக்கள் காற்றோடு கலந்திருக்கும். அவை நம்முடைய உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும். குளிக்காமல் செல்வதால் நமக்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம் | Chanakya Advise On Take Bath After Doing 3 Things

நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்

நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்

3.முடி அல்லது தாடி வெட்டிய பிறகு:

ஆண்கள் முடி வெட்டிய பிறகு அல்லது ஷேவிங் செய்த பிறகும் நிச்சயம் குளிக்க வேண்டும். காரணம் முடி வெட்டும் பொழுது சிறிய முடிகள் உடலில் ஒட்டிக் கொள்ளலாம். இதனை துடைத்தால் மட்டும் போகாது. குளிக்காவிட்டால் உணவின் வழியாக வயிற்றுக்குள் செல்லக்கூடிய அபாயம் வரலாம். அதனால் குளிப்பது நன்மை தரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US