உங்கள் ஜாதகத்தில் கேது உடன் இந்த கிரகம் உள்ளதா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர் கேது பகவான். கேது பகவானை ஞானக்காரன் என்று சொல்லுவார்கள். இவர் ஒரு மனிதனை எந்த அளவிற்கு பக்குவப்படுத்தினால் அவன் வெற்றியை அடைவான் என்று அவர்களுக்கு பார்த்து பார்த்து வழிநடத்தக் கூடிய ஒரு முக்கியமான கிரகம் ஆகும்.
அந்த வகையில் ஜாதகத்தில் கேது பகவானுடன் சில கிரகங்கள் அமைய பெற்று இருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் அவர்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
1. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் கேது இணைந்திருந்தால் தந்தையின் வளர்ச்சிக்கு சில பாதிப்புகள் உண்டாகும். அதேபோல் தந்தையின் வழியாக வரக்கூடிய அன்பு பாசம் தடைப்படும். வீடுகளில் ஆண் பிள்ளை இருந்தால் அவர்கள் வழியாகவும் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
2. ஜாதகத்தில் சந்திரன் கேது இருந்தால் அவர்கள் மன ரீதியாக நிறைய குழப்பங்களை சந்திக்கிறார்கள். இந்த இணைப்பு தாய் உடல் நிலையில் சில பாதிப்புகளும் கொடுக்கக்கூடும்.
3. ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது இணைந்து இருந்தால் அவர்களுக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இவர்கள் எவ்வளவு வீரமாக இருக்கிறார்களோ அவ்வளவு பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களால் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் உருவாகும்.
4. ஜாதகத்தில் புதனுடன் கேது இணைந்து இருந்தால் தாய்மாமன் வழியாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். நிலையான கல்வி அமைவதில் சிக்கல்களை சந்திப்பார்கள்.
5. ஜாதகத்தில் குருவுடன் கேது இணைந்திருந்தால் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும். தானம் செய்யக்கூடிய சிந்தனை இவர்களுக்கு அதிகம் இருக்கும். திடீரென்று சில முடிவுகளை எடுத்து செயல் புரியக்கூடிய நிலைமை உருவாகும்.
6. ஜாதகத்தில் சுக்கிரனுடன் கேது இணைந்திருந்தால் திருமணங்களின் சில தடைகளை இவர்கள் சந்திப்பார்கள். அதேபோல் இவர்கள் ஒரு விஷயத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அதில் பல தடைகளை சந்தித்த பிறகு தான் அவர்களால் அதை அனுபவிக்கும் நிலை உருவாகும்.
7. ஜாதகத்தில் சனி கேது இணைந்திருந்தால் தொழில் ரீதியாக சில சங்கட்டங்களை இவர்கள் சந்திப்பார்கள். வேலை செய்யும் இடங்களில் அடிக்கடி இவர்களுக்கு உயர் அதிகாரிகளால் தொந்தரவுகள் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







