கோடீஸ்வர யோகம் பெற வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்ய தவறாதீர்கள்
மனிதர்களாக பிறந்த யாருக்குத்தான் பணம் தேவைப்படாமல் இருக்கின்றது. பணமிருந்தால் தான் இந்த உலகத்தில் வாழக்கூடிய பலம் கிடைக்கிறது. அப்படியாக நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் செல்வம் சேராவிட்டாலும் கடன் வாங்காத அளவிற்கு நம்முடைய பொருளாதார நிலை இருக்க வேண்டும் என்றுதான் இன்று பெரும்பாலான மனிதர்களின் கனவாக இருக்கிறது.
அந்த வகையில் வீடுகளில் செல்வம் சேரவும் பொருளாதாரத்தில் சிக்கல்கள் உண்டாகாமல் இருக்கவும் நாம் சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள்.
மேலும் ஹோரையை பார்த்து வேலையை செய்தவரிடம் மோதினால் காரியம் ஜெயிக்காது என்பது ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு ஹோரை என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பொதுவாகவே, வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாகும். வெள்ளிக்கிழமையில் தான் சுக்கிர பகவானுக்குரிய தினமும் ஆகும். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர வாரம் என்று சொல்லுவார்கள். அன்றைய தினத்தில் சுக்கிரனுடைய ஹோரை நேரத்தில் நாம் சில பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வதால் நம் வாழ்க்கையில் பல மடங்கு பலனை பெறலாம்.
ஜோதிடத்தில் பல ரகசியங்கள் நிறைந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த ஹோரை வழிபாடு. ஹோரை என்பது 7 கிரகத்திற்கும் உரிய நேரமாகும். அந்த வகையில் ஹோரை என்பது ஒவ்வொரு நாளின் உடைய 24 மணி நேரத்தில் கணக்காகும்.
இந்த ஹோரையின் கணக்கு காலை 6 மணியிலிருந்து தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை உள்ளது. இதில் ஒவ்வொரு தினத்திற்குரிய கிரகத்தின் உடைய அதிபதிகள் தான் அந்த தினத்தினுடைய ஹோரையாக கருதப்படுகிறார்கள்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை என்பது காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுக்கிர ஹோரை மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை உள்ளது.
பிறகு இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை உள்ளது. இந்த சுக்கிர ஹோரையை நாம் பயன்படுத்தி வழிபாடு செய்து விட்டால் நம் வாழ்க்கையில் மிகப் பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுவிடலாம்.
அதாவது, சுக்கிர ஹோரையில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அளவில் வருகின்ற நேரத்தை பயன்படுத்தி நாம் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும். இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது நமக்கு மும்மடங்கு பலனை பெற்றுக் கொடுக்கிறது. அதேபோல் மாலையில் வீடுகளில் விளக்கேற்றினாலும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி நேரத்தில் வர கூடிய சுக்கிர ஹோரையில் விளக்கு ஏற்றிவழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை மிக முக்கியமாக தீராத கடன் பிரச்சனைகளால் தவிப்பவர்களும் கடனை ஒருவருக்கு கொடுத்துவிட்டு அதை திரும்ப பெறுவதற்காக காத்திருப்பவர்களும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு லாபத்தை பெற வேண்டும் என்று வருந்துபவர்களும் தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த சுக்கிர ஹோரையில் நாம் வழிபாடு செய்வதால் நம்முடைய மன கவலைகள் விலகி நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது.
மேலும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்கு ஒரு மிகச் சிறந்த நாள் ஆகும். மகாலட்சுமி தாயாருக்கு இணையாக நாம் கல் உப்பை போற்றி வழிபாடுகளில் வைக்கின்றோம். இதனால் சுக்கிர ஹோரையில் கல் உப்பை வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்வதாலும் நமக்கு நற்பலன்கள் கிடைக்கிறது. இந்த தினத்தில் நாம் மஹாலக்ஷ்மி தாயாரையும் சுக்கிர பகவானையும் மனதார வழிபாடு செய்தால் கட்டாயம் நம் வாழ்க்கையில் நல்ல பலன் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







