உங்கள் பெயர் S என்ற எழுத்தில் தொடங்குகிறதா? அப்போ உங்கள் குணநலன்கள் இதுதான்
ஜோதிடத்தில் பல வகை இருக்கிறது. அதில் எண் கணிதமும் ஒன்று. எண் கணிதம் வைத்து பல விஷயங்களை கணித்து விடலாம். ஒருவர் பெயரின் முதல் எழுத்தை வைத்து அந்த நபர் எப்படி பட்டவர்கள் என்று சொல்லிவிடலாம்.
அந்த வகையில் ஒருவருடைய பெயரின் முதல் எழுத்து "S"என்று தொடங்கினால் அந்த நபர் எப்படிப்பட்ட நபராக இருப்பார் அவருடைய தொழில் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே "S"என்று பெயரின் தொடக்கம் இருந்தால் அவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவார்கள். அதாவது தன்னை ஒரு பிரபஞ்ச சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் ஆழ்ந்து நம்ப கூடியவர்கள். மேலும் இவர்கள் முடிந்தவரை கண்ணியமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இவர்கள் அவ்வளவு எளிதாக யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பலவீனம் இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுதல் என்றே சொல்லலாம்.
மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். அதேபோல் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று நினைத்து விட்டால் அதற்காக அதிகப்படியான உழைப்பை கொடுக்க கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







