திருச்செந்தூர் முருகன் கோவிலில் பவுர்ணமியையொட்டி அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது.
மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
கோவிலுக்கு வார விடுமுறை தினங்கள், விழா நாட்கள் மற்றும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் புனித கடலில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பவுர்ணமி தினத்தை முன்னிட்டு இரவு, பகல் பாராமல் பக்தர்கள் குவிந்ததால் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும், போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |