நாளைய ராசி பலன்(07-12-2025)
மேஷம்:
தொழில் ரீதியாக உங்களை வளர்த்து கொள்வீர்கள். வாழ்க்கை ரீதியாக புதிய அனுபவங்களை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்:
வேலை தொடர்பாக நீங்கள் வெளியூர் செல்ல நேரலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பணத்தை வீணாக செலவு செய்யாமல் இருப்பது நல்லது. உடல் சோர்வு விலகும்.
மிதுனம்:
குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். தொழில் இடத்தில் தேவை இல்லாமல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது. சிலருக்கு இட பிரச்சனை மதியம் மேல் வரலாம்.
கடகம்:
உங்கள் கணவன் மீது அதீத வெறுப்புகள் காட்டாமல் இருப்பது உறவை பாதுகாக்கும். மன அழுத்தம் நீங்க தியானம் செய்யுங்கள். தாயின் ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கும் நாள்.
சிம்மம்:
வியாபர போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்கு தொடர்பாக வீண் அலைச்சல் சந்திக்க நேரலாம். வருமானத்தில் சந்தித்த கஷ்டங்களும் வாங்கிய கடனும் விலகும்.
கன்னி:
திருமண தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை பெரும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் செல்லும். குலதெய்வ வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
துலாம்:
வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். மதியம் மேல் மனதில் உள்ள குழப்பங்கள் விலகும்.
விருச்சிகம்:
மருத்துவ செலவுகள் வரலாம். உங்களின் பிடிவாதம் குறைத்து கொண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில சங்கடம் உண்டாகும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். தாய் மாமன் வலி உறவால் சில பரிசுகள் பெரும் நாள்.
மகரம்:
அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதரவும் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் கைக்கு வராத பணம் கைக்கு வரும். சிலர் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் நாள்.
கும்பம்:
சகோதரி உறவால் சில மன கசப்புகள் வரலாம். வேலை மாற்றம் சிலருக்கு நடக்க வாய்ப்புகள் உள்ளது. மதியம் மேல் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.
மீனம்:
உங்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும் நாள். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை உண்டாகும். கடன் சுமை குறையும். ஒரு சிலர் கடந்த கால தவறுகள் எண்ணி வருந்துவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |