இன்றைய ராசி பலன்(06-01-2026)

Report

 மேஷம்:

நீண்ட நாள் மனதில் ஓடிக் கொண்டிருந்த குழப்பத்திற்கான பதிலை பெறுவீர்கள். குழந்தைகள் மீது அக்கறையும் அவர்களுடைய தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

ரிஷபம்:

குடும்பத்தில் எதிர்பாராத நபர்களுடைய ஆதரவு கூட இன்று நீங்கள் பெற்றுவிடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுகளையும் பெறக்கூடிய நாள். சிலர் மதியம் மேல் நல்ல ஓய்வு எடுப்பீர்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையை பற்றிய குழப்பம் விலகும். தொழில் ரீதியாக புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்வீர்கள்.

கடகம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மதியம் மேல் தேவை இல்லாத அலைச்சலால் மன வருத்தம் வரலாம். பிறரை பற்றிய சிந்தனையை விடுத்து சுயநலமாக யோசிக்க வேண்டிய நாள்.

குபேரன் ஆசி பெற்ற 4 ராசிகள் - தங்க புதையல் கிடைக்குமாம்

குபேரன் ஆசி பெற்ற 4 ராசிகள் - தங்க புதையல் கிடைக்குமாம்

சிம்மம்:

இன்று தொழில் தொடர்பான பயணங்களில் நல்ல வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை செய்யக்கூடும். சொத்து தொடர்பான விஷயங்களால் மன உளைச்சல் உண்டாகலாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:

இன்று உடன் பிறந்தவர்கள் பற்றிய உண்மையை அறிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பண வரவு நினைத்தது போல் கிடைக்கும். அலுவலகத்தில் தேவை இல்லாமல் வீண் வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள்.

துலாம்:

நண்பர்கள் உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருப்பார்கள். உங்களுடைய திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர்களுடைய வருகையால் திடீர் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.

விருச்சிகம்:

வெளியூர் பயணம் செல்லும் பொழுது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனம் வேண்டும். ஒரு சிலர் புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள்.

தனுசு:

இன்று உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய நாள். கடந்த கால நினைவுகள் உங்களுக்கு சில கஷ்டங்களை கொடுக்கும். இறை வழிபாடு திருப்புமுனையாக அமையும்.

மகாலக்ஷ்மியின் அருள் பெற இந்த 8 விஷயங்கள் செய்யுங்கள்.. அதிர்ஷ்டம் உறுதி

மகாலக்ஷ்மியின் அருள் பெற இந்த 8 விஷயங்கள் செய்யுங்கள்.. அதிர்ஷ்டம் உறுதி

மகரம்:

வாழ்க்கை துணையை பற்றி பிறரிடம் நீங்கள் குறை சொல்லாதீர்கள். வழக்கு விஷயங்களில் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்:

ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் நீங்கள் தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். நெருங்கியவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளும் நாள்.

மீனம்:

சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று நீங்கள் இன்று தெரிந்து கொள்வீர்கள். வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நாள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US