நாளைய ராசி பலன் (27-01-2026)
மேஷம்:
இன்று பொருளாதார ரீதியாக பின்னடைவு ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.
ரிஷபம்:
இன்று வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
வழக்கு விஷயங்களில் உங்களுக்கு ஒரு பதட்டமும் மன அமைதியும் இல்லாத சூழ்நிலை உண்டாகும். குடும்பத்துடன் தொலைதூர பயணங்களில் பங்கு கொள்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கடகம்:
வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். உங்களுடைய பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதியம் மேல் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.
சிம்மம்:
தந்தை உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் சில சிக்கல் வரலாம். ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திடீரென்று பொருளாதார இழப்பு ஏற்படலாம். யாருக்கும் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்த்து விடுங்கள். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.
துலாம்:
இன்று உங்கள் மனதில் இருந்த கவலைகள் எல்லாம் விலகும் நாள். நீண்ட நாள் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு என்று பாராட்டுக்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு ஒரு சில பிரச்சனைகள் வரலாம்.
தனுசு:
குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். உங்களிடம் வம்பு இழுத்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
மகரம்:
வேலைக்காக நீங்கள் வெளியூர் செல்ல நேரலாம். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கும் நாள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.
கும்பம்:
எதிர்பாராத நபரிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நினைத்து வரன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் பெறுவீர்கள். வெற்றி பெறும் நாள்.
மீனம்:
பிள்ளைகளுடைய உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் விலகும். இறைவழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |