நாளைய ராசி பலன் (28-03-2026)
மேஷம்:
உறவினர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியால் சில அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் பெறக்கூடிய நாள்.
ரிஷபம்:
மனதில் தெளிவு பிறக்கும். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலனும் அதற்கான அங்கீகாரமும் பெறுவீர்கள். நட்புகள் வட்டாரத்தில் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள்.
மிதுனம்:
பூர்விக இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாட்கள் தடைபட்ட பொருளாதார சிக்கல் விலகும். எதையும் நிதானமாக கடைபிடித்து செயல்படுவீர்கள். நன்மையான நாள்.
கடகம்:
சில முக்கிய பணிகளை நீங்களே செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மை வரலாம். பெரியவர்களின் ஆலோசனையும் அரவணைப்பையும் பெறக்கூடிய நாள்.
சிம்மம்:
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு பெறுவீர்கள். வண்டி வாகன பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
கன்னி:
கல்வியில் இன்று மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். உங்களுடைய பேச்சுத் திறமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உங்கள் மீதான நம்பிக்கையால் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை கொடுப்பார்கள்.
துலாம்:
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சுப காரிய நிகழ்ச்சிகளில் இருந்த அந்த தடை நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
கல்வி சார்ந்த முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வழியே சற்று பொறுமையாக பேசுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று ஒரு சிலருக்கு காது வலி ஏற்படலாம். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். மறைமுக விமர்சனங்களை சந்திப்பீர்கள். மனதில் புதுவித சிந்தனையும் விவேகமும் நிறைந்த நாள்.
மகரம்:
பழைய நட்புக்களில் சந்திப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பொன் பொருள் ஆடம்பரச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்களின் இனிமையான பேச்சுக்களால் சாதகமான முடிவை பெறுவீர்கள்.
கும்பம்:
எதிர்பாராத சில உதவிகள் உங்களை தேடி வரும். திடீர் பயணங்களால் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுறையை பெறுவீர்கள். அரசு காரியங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும்.
மீனம்:
வழக்குகளில் திருப்புமுனைகளை சந்திப்பீர்கள். வியாபார பணிகளில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பொழுது போக்கு விஷயங்களில் நீங்கள் அதிக அளவு ஆர்வம் செலுத்த வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |