நாளைய ராசிபலன் (23-10-2026)
மேஷம்:
சுப காரிய தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பிற மொழி பேசும் மக்கள் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் பெறுவீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் சில மாற்றங்கள் சந்திப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.
மிதுனம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடைய உதவியை பெறுவீர்கள். தனித்தன்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
கடகம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். ஆலய திருப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்றமான நாள்.
சிம்மம்:
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி:
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் இடையே இருந்த பிரச்சனை விலகும். இருந்தாலும் மதியம் மேல் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
வியாபாரங்களில் உங்களுடைய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனை மீதான கடன் உதவிகள் பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுப்புகளும் அலைச்சலும் உண்டாகும்.
தனுசு:
அரசு விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் கவனத்திற்கு செல்லும் வகையில் உங்களுடைய நடவடிக்கையை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மகரம்:
செய்யும் செயல்களில் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் விலகும். எதிலும் துணிச்சலுடன் செய்வீர்கள்.
கும்பம்:
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். மனம் விட்டு பேசுவதால் உங்களுக்கு புரிதல் உண்டாகும் நாள்.
மீனம்:
பலதரப்பட்ட சிந்தனைகள் வந்து செல்லும். மறைமுக எதிர்ப்புகள் வழியாக செயல்பாடுகளில் தாமதம் உண்டாகலாம். எதிர்பாராத செலவுகள் வழியே சேமிப்புகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |