உருவாகும் தனலட்சுமி ராஜ யோகம்-கோடீஸ்வரன் ஆகும் ராசிகள்
செவ்வாய் கிரகம் கடக ராசியில் டிசம்பர் 7, 2024 அன்று அதிகாலை 4:56 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறது. இதனால், தனலட்சுமியின் அருள் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும். வக்ர செவ்வாயால் உருவாகும் தனலட்சுமி ராஜயோகத்தால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியில் செவ்வாய் பத்தாம் வீட்டில் வக்ரமாகி தனலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும்.
வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும்.வியாபாரத்தில் போட்ட முதலீட்டை லாபம் பார்த்து விடுவீர்கள்.நணபர்களுடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் மிக பெரிய வெற்றியை தரும்.
கன்னி:
இந்த தனலட்சுமி ராஜயோகம் கன்னி ராசிக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது. இந்த ராசியில் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் இருப்பார்.இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில்,மனதில் மகிழ்ச்சி உற்ச்சாகம் பிறக்கும்.
உங்களுக்கு நட்பு வட்டாரம் விரிவு அடையும்.வேலைக்காக தொலைதூர பயணம் செல்வீர்கள்.உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.இத்தனை நாள் உழைப்பிற்கு ஏற்ப கிடைக்காத வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில், செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார்.இதனால் இந்த ராசிகளுக்கு மிக பெரிய எதிர்பாராத மாற்றத்தை கொடுக்கும்.நீண்ட நாள் முடியாத காரியம் முடிவிற்கு வரும்.முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரும்
வருமானம் அதிகரிக்கும்.வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.காதல் வாழ்க்கையில் சிறந்து விளங்கும்.குடும்பத்தில் உங்கள் பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும்.பொருளாதார மாற்றம் உங்களை மென்மேலும் வளர செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |