தினம் ஒரு திருவாசகம்
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயினானே.
விளக்கம்
தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல,நான் இத்தன்மையன் என்று உன்னியல்பை எனக்கு அறி வுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இருப்பினாற் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன்; முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |