சிவ ஆலயத்தின் ஐவகை நந்திகள் பற்றி தெரியுமா?
சிவன் கோயில்களில் மூலவர் பெருமானுக்கு எதிரில் வீற்றிருப்பவர் நந்தியெம்பெருமான்.
கோயில்களில் அமைக்கப்பெறும் நந்திகளில் ஐவகை நந்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நந்தியை வழிபாடு செய்து விட்டு பிறகு சிவபெருமானை வழிபாடு செய்தால்தான் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
1. கைலாச நந்தி: சிவன் கோயில்கள் மூலவருக்கு அருகே இந்த நந்தி அமைந்திருக்கும் கைலாசத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இந்த நந்தி இருப்பதால்தான் இதற்கு கைலாச நந்தி என்று பெயர்.
2. அவதார நந்தி: சிவபெருமானுக்கு திருமாலே வாகனமாக மாறி நந்தியாக உருவெடுத்தார். இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றனர்.
3. அதிகார நந்தி: சிவபெருமானை தரிசனம் செய்ய வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் இந்த நந்திக்குக் கொடுத்திருப்பதால் இது அதிகார நந்தி என அழைக்கப்படுகிறது.
4. சாதாரண நந்தி: ஐந்து நந்திகளுக்கும் குறைவான சிவன் கோயில்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.
5. பெரிய நந்தி: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வீற்றிருக்கும் நந்திதான் பெரிய நந்தியாகும். இது சிவன் கோயில்களின் நுழைவாயிலில் காணப்படும் நந்தியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |