கோயில் என்பது மனிதனின் பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஓர் இடம்.அப்படியாக அங்கு சென்று வர நம்முடைய துன்பங்கள் தீர வேண்டும் அல்லவா?ஆனால் சிலருக்கு கோயிலுக்கு சென்று வர துன்பங்கள் அதிகம் வருவதை பார்க்க முடியும்.
அப்படியாக அதை பற்றி நம்மிடம் உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறார் முருக பக்தர் ஒருவர்.அதை பற்றி பார்ப்போம்.
ஒரு நபர் திண்டுக்கல் அருகில் இருக்கும் மலை மேல் இருக்கும் முருகன் கோயிலுக்கு செல்கிறார்.அவர் அங்கு செல்வது அது தான் முதல் முறை.போகும் பொழுதே அவரின் மனம் ஏதோ பதட்டத்துடன் இருப்பதை காணமுடிகிறது.
மலை மேல் இருப்பதால் ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறும் பொழுது அவருக்கு மனதில் எண்ணற்ற சிந்தனைகள்.எப்படியோ சிந்தனை புயலை கடந்து கோயிலுக்குள் செல்கிறார்.அழகே உருவகமாக முருகன் வீற்றியிருப்பதை பார்த்த நொடியில் அவருக்கு கண்களில் கண்ணீர் பாய்ந்து ஓடியது.
அது மெனக்கிடாத கண்ணீர்,செய்வதறியாது தவிக்கும் கண்ணீர்.அவனை பார்த்த கண பொழுதில் துன்பத்தில் தவிக்கும் தன் குழந்தையை கட்டி அணைப்பது போல் அவரின் பிரகாசத்தால் மனம் கொட்டி தீர்த்து விட்டது.
அவர் வேண்டுதல் வைக்கவில்லை.ஆனால் முருகன் புரிந்து கொண்டார்.அன்று இரவு வீடு திரும்பியதில் இருந்து அவருக்கு தொடர் பிரச்சனைகள்.ஏன் அந்த பிரச்சனையால் உயிர் விடும் அளவிற்கு அவர் சென்று விட அந்த உயிரும் முருகன் அருளால் காப்பாற்றப்பட்டது.
இவ்வாறு அடுத்து அடுத்து பிரச்சனையால் சிக்கிக்கொள்ள,அந்த நபருக்கு முருகன் மேல் அதீத கோபம்.உன்னைத்தானே நான் கடைசியாக பார்த்தேன்.குழந்தை போல் உன் பார்வையை பற்றி கொண்டு அழுது கதறினேனே என் மேல் இரக்கம் இல்லையா?என்று அழுது புரள,துளியும் இரக்கம் காட்டவில்லை முருகன்.
அந்த பிரச்சனையும் சமாளிக்க முடியாத அளவு கைமீறி போயிவிட்டது.விரக்தியில் அவர் அடுத்து ஒரு வருடத்திற்கு முருகன் என்ற நாமே சொல்லவில்லை.வாழ்க்கையே சலித்துவிட்டது.ஆனால் அவ்வப்பொழுது முருகனிடம் நீ தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சண்டையிட்டு கொள்வார்.
இப்படியாக ஒன்றரை வருடம் கழிந்தது.அது தான் அவரின் பிரச்சனை ஓய்வு பெரும் நேரம்.மனதில் விடாது பெய்யும் மழை போல் சந்தோஷம் நுழையும் காலம்.அப்பொழுது அவர் உணர்கிறார்.அந்த மலை கோயிலுக்கு செல்வதற்கு ஒரு 6 மாதங்கள் முன் வரை வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.
அழுகையால் துவண்டு போகாத நாளில்லை.யாராவது காப்பற்ற வர மாட்டார்களா?என்று தவித்து துடித்த காலம்.அவர் அந்த கோயிலுக்கு செல்ல முருகன் நினைத்திருக்கிறார்.இனியும் இவனை நாம் காப்பாற்றவில்லை என்றால் அவன் காணாமல் போயிவிடுவான் என்று பிரச்சனையை உச்சமாக்குகிறார்.
அதாவது ஒரு விஷயத்திற்கு நல்ல முடிவு வேண்டும் என்றால் அது மிக பெரிய பிரச்சனையாக முற்ற வேண்டும்.அப்படிதான் அவரின் வாழ்விலும் நடந்தது.அந்த கோயிலுக்கு சென்று வர சொந்த வாழ்க்கையில் பிரச்சனை முற்றியதே தவிர,தொழில் வாழ்க்கை வீழவில்லை.
அந்த சம்பவம் பிறகே அவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பார்க்க முடிந்தது.7 வருடம் கிடைக்காத முக்கிய சான்றிதழ் அவர் கேட்காமல் எளிதாக கிடைக்கிறது.வேலையில் முன்னேற்றம்.தொழில் வளர்ச்சி என்று அவர் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை என்றாலும் இவை எல்லாம் மிக சரியாக நடந்து கொண்டு இருந்தது.
நீண்ட நாட்களாக முன்னேற்ற பாதையை தேடியவருக்கு நல்ல பாதை அமைந்தது.அந்த ஒன்றரை வருடமும் அவரை துவண்டு போக விடாமல் காலமும் எப்படியோ கைபிடித்து கூட்டி வந்து கரை சேர்த்து விட்டது.இறுதியில் அவர் போராடிய சொந்த பிரச்சனையும் நல்ல முடிவு பெற்றது.
அவர் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஆசை பட்டரோ அவ்வாறே முருகன் அருளிச்செய்தார்.ஆக,தூய மனதில் உண்மை பக்தி இருக்க கெட்ட காலமாகவே இருந்தாலும்,இறைவன் அருளால் நல்லதாக அமையும்.இவருக்கு வாழ்க்கை சுமார் ஒன்றரை வருடம் கழித்து மாறியது.
அதாவது அவரின் கர்மவினைகள் எல்லாம் விலகி துன்பம் தீர்ந்து அவர் வேண்டியது கிடைத்தது.ஆனால் அதற்கு கொடுத்த விலை அளவில்லாதது.என்ன செய்வது நிலையானது ஒன்று அமைய பல கடின காலங்கள் கடந்தாகவேண்டும்.
அதனால் கோயிலுக்கு செல்வதால் கஷ்ட காலங்கள் வருகிறது என்றால்,உங்கள் வாழ்க்கை வளமாக போகிறது என்று நம்புங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |