வீட்டில் சிவப்பு நிற எறும்புகள் வருகிறதா?வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?
எறும்பு என்பது சாதாரணமாக எல்லா இடங்களிலும் பார்க்க கூடிய விஷயம்.அதிலும் வெயில் களங்களில் வீடுகளில் அதிக அளவில் எறும்புகளை காணலாம்.அப்படியாக எறும்புகளில் நாம் சிவப்பு மற்றும் கருப்பு எறும்பை பார்க்க முடியும்.
அவ்வாறு எந்த நிற எறும்பு வீட்டிற்கு வருவது அதிர்ஷ்டம்?எந்த நிற எறும்பு வருவது துரதிர்ஷ்டம் என்று பார்க்கலாம். ஜோதிட சாஸ்திர படி வீட்டிற்கு கருப்பு மற்றும் சிவப்பு எறும்பு வருவது தற்செயலான நிகழ்வு ஆல்ல என்று சொல்கிறார்கள்.
அதாவது வீட்டில் இனிப்பு வகையான பொருட்கள் ஏதேனும் சிறியதாக சிதறி இருந்தாலும் எங்கு இருந்து எறும்பு படைகள் வருகிறது என்று தெரியாது.ஆனால் திரண்டு விடும்.அப்படியாக,வீட்டிற்கு சிவப்பு எறும்பு வருவது வீட்டில் நிதி இழப்புகள்,சண்டைகள்,மற்றும் பொருளாதார வீழ்ச்சியை மற்றும் மன அழுத்தத்தை சந்திக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அதே சிவப்பு எறும்பு வாயில் முட்டையுடன் வெளியே சென்றால், அது ஒரு நல்ல விளைவாகக் கருதப்படுகிறது. அதே போல்,வீட்டை சுற்றி கருப்பு எறும்புகள் இருந்தால் அது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தின் அறிகுறியாகும்.
அதாவது வீட்டில் எங்கு எல்லாம் கருப்பு நிற எறும்புகள் உலா வருகிறதோ அங்கு எல்லாம் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆக,வீடுகளில் எந்த நிற எறும்புகள் வருகிறது என்று கவனித்து கவனமாக இருப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |