உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் தனித்து இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்
ஜோதிடம் என்பது ஒரு நுட்பமான கலையாகும். அதாவது ஜோதிடத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது. அப்படியாக ஜாதகத்தில் நவகிரகங்களில் சுபர் கிரகங்களாக இருக்கக்கூடியவர் குரு பகவான். இவர் ஒரு வீட்டில் தனித்திருக்கும் பொழுது அது தோஷம் என்று கருதப்படுகிறது.
அப்படியாக குரு பகவான் தனித்திருந்தால் அது தோஷமா? என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான நபராக இருக்கிறார். அவர்தான் ஜாதகரை குறிக்கக் கூடியவராக இருக்கிறார்.
அதாவது குரு பகவான் ஒருவருக்கு நல்ல அமைப்புகளில் அமைந்து விட்டால் அந்த நபர் சமுதாயத்தில் நற்பெயர்களுடன் வாழ்வார் இல்லை என்றால் அந்த நபர் தொழில் ரீதியாக நிறைய சிரமங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரலாம். அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் குருபகவான் தனித்திருக்கிறார் என்றால் அது ஒரு மிகப்பெரிய தோஷம் என்று பலரும் சொல்வார்கள்.

ஆனால் தனித்த குரு என்பது ஒரு ராசி கட்டத்திற்கு மட்டும் வைத்து பார்ப்பது அல்ல. குரு அமர்ந்து இடத்தில் இருந்து இரண்டாம் இடம், பனிரெண்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் குரு தனித்த குரு என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த அமைப்புகளுக்கு மட்டும் காரகோ பாவ நாஸ்தி என்று சொல்வார்கள்.
மேலும் குருபகவான் குழந்தையை குறிப்பவர் என்பதாலும் ஐந்தாம் இடத்தில் குரு பகவான் தனித்திருப்பது இருப்பது ஜாதகருக்கு சிறப்பான பலனை கொடுக்காது என்றும் சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் குருவுக்கு 2, 12 ஆம் இடங்களில் ஏதேனும் கிரகம் இருப்பது தனித்த குருவாக ஆகாது.
இவற்றில் குருவுடன் இணைந்த கிரகம் மற்றும் பார்வை செய்யும் கிரகம் மற்றும் குருவுக்கு அருகாமையில் இருக்கும் கிரகம் என்று பல விதி முறைகள் கூறப்பட்டுள்ளது. பழைய நூல்களில் கூறப்பட்ட சில விஷயங்களை ஆழமாக தெரிந்து கொள்ளாமல் சில ஜோதிடர்கள் தனித்த குரு தோஷம் என சொல்கிறார்கள்.

இதில் குரு பகவான் உச்சம், பலம், ஆட்சி, நட்பு குருவுக்கு பார்வைப்படும் கிரகங்கள், குரு பார்வை செலுத்தும் கிரகங்கள் என பல வகையில் நாம் எடுத்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆக ஜோதிடத்தில் குரு பகவான் தனித்து இருந்தால் தோஷம் என்றும் கூறுவது தவறானதாகும்.
மேலும் ஜோதிடத்தில் குரு பகவானை வைத்து நிறைய பலன்கள் சொல்வதுண்டு. அவருடைய பார்வை பலத்தால் நன்மை தீமைகள் என பல வகைகள் நாம் சொல்லலாம். அதோடு இவை அனைத்தும் ஒவ்வொருவர் பிறந்த லக்னம் நட்சத்திரம் ராசி பொருத்து மற்றும் தசா புத்தி வைத்து நாம் சொல்ல வேண்டிய விஷயமாகும்.
ஆக குரு பகவான் தனித்திருந்தால் அது தோஷம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளாமல் ஜாதகத்தை நல்ல ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |