மாசி மாத துளசி பூஜையில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
12 மாதங்களில் மாசி மாதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
மாசி மாதத்தில் துளசியை வழிபடுவதன் மூலம், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளான மாசி மகத்தில் துளசியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மாசி மாதத்தில் துளசியை வழிபடும்பொழுது சில விடயங்களில் தவறுகளை செய்யக்கூடாது.
செய்யக்கூடாத தவறுகள்
மாசி மாத துளசி வழிபாட்டில் கருப்பு எள்ளை சமர்பிக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் ஜாதகத்தில் சூரிய கிரகத்தை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டில் சிவன் சம்மந்தப்பட்ட பொருட்களான சிவலிங்கம், ருத்ராட்சம் மற்றும் கனகாம்பரம் போன்றவற்றை சமர்பிக்கக்கூடாது.
மேலும் சந்தனம், குங்குமம் மற்றும் குங்குமப்பூ போன்றவற்றை சமர்பிக்கக்கூடாது.
துளசி வழிபாட்டில் பால் சமர்பிக்கக்கூடாது. இதனால் துளசி செடிக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல், துளசியில் தண்ணீர் கலந்து வழங்கக்கூடாது. இதுவும் துளசி செடிக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |