வீட்டின் தலைவாசலை ஏன் மிதிக்க கூடாது என்று தெரியுமா?
வீட்டில் நுழையும் முதல் இடமாக நிலைவாசல் எனப்படும் தலைவாசல் உள்ளது.
இதனை மிதித்தாலோ அல்லது ஏறி நின்றாலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டுவார்கள்.
அந்தவகையில், தலைவாசலை ஏன் மிதிக்க கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குலதெய்வம் வீட்டில் இருக்கும் கதவில் குடியிருக்கும் என்பதால் தான், அன்றைய காலத்தில் வாசல் கதவை சத்தமாகத் திறக்கவும், மூடவும் மாட்டார்கள்.
வாசல் கதவின் இருபறத்திலும் கும்ப தேவதைகள் வாசம் செய்வதால் அவர்களை குளிர்விக்கும் எண்ணத்தில் தான் விளக்கு ஏற்றப்பட்டு வந்தது.
அதோடு வீட்டில் நுழையும் போது கும்ப தேவதைகளை வணங்குவதை உணர்த்துவதற்காகத் தான் குனிந்து செல்ல கதவின் நுழைவாயிலின் உயரத்தைக் குறைவாக வைப்பர்.
கோயில்களுக்கு செல்லும் போது எப்படி தலைவாசலை மிதிக்காமல் தாண்டிச் செல்கிறோமோ, அதுபோல வீட்டின் தலைவாசலையும் மிதிக்காமல் செல்ல வேண்டும்.
தெய்வீகம் மிகுந்த வாசல் படியில் நிற்பதும், உட்காருவதும், தலை வைத்துப் படுப்பதும் தவறான செயலாகும்.
இப்படிச் செய்வதால் தரித்திரம் நம்மைத் துரத்தும், வீட்டிற்கு வரும் பணவரவும் குறைந்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் நிம்மதி சீர்குலைந்து விடும், கெட்ட சக்திகள் வீட்டில் நுழையும்.
குலதெய்வமும், அஷ்டலட்சுமியும் வாசம் செய்யும் வாசல் கதவின் இருபுறங்களிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |