தசரா 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும் தசரா பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டங்களில் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் புதன் சூரியன் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் துலாம் ராசியில் இணைந்திருக்கும். ஜோதிடப்படி சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது சுக்ராதித்ய யோகத்தை உண்டாக்கும்.
அதேபோல், சூரியன் புதன் இணைவு புதாதித்ய யோகம் உருவாக்கும். இந்த கிரகங்களின் உடைய அமைப்பு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் வெவ்வேறு விதமான தாக்கங்களை உண்டு செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் எந்த ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை சந்திப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. வேலை செய்யும் இடங்களில் கடின உழைப்பால் அங்கீகாரத்தை பெறுவார்கள். பதவி உயர்வு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மிக சாதகமாக கிடைக்கும்.
புதிய திட்டங்கள் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது அற்புதமான காலகட்டமாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிக சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்க போகிறது. நீண்ட நாட்கள் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இந்த காலகட்டம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
வியாபார ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய நன்மையை வழங்கப்போகிறது. புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் ரீதியாக முக்கியமான நபரின் அறிமுகத்தை பெறுவீர்கள்.
நீண்ட நாட்கள் பொருளாதாரத்தில் இருந்து வந்து நெருக்கடிகள் யாவும் நீங்கும். புதிய திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |