மகாபாரதம்: கடவுள் மீது பக்தி வைக்க இந்த ஒரு தகுதி போதும்.. உங்களிடம் உள்ளதா?
நாம் எல்லோருமே இறைவழிபாடு செய்கின்றோம். அதில் பெரும்பாலும், நாம் துன்பங்களிலேயே இறைவனை அதிக அளவில் நாடி செல்கின்றோம். அப்படியாக. நாம் கடவுள் மீது வைக்கக் கூடிய பக்திக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு சமயம் கண்ணன் மேலே பறந்த பறவையை பார்த்து அர்ஜுனிடம் மைத்துனா! அது புறதானே என்கிறார். அர்ஜுனனும் ஆமா! கண்ணா அது புறா தான் என்கிறான்.
பிறகு கண்ணன் இல்லை இல்லை கழுகு மாதிரி தெரிகிறது என்று சொல்ல, அர்ஜுனன் ரொம்ப சரி அது கழுகு தான் என்கிறார்.
பிறகு கண்ணன் அர்ஜுனா! சரியாக பார் அது கிளி மாதிரி அல்லவா தெரிகிறது என்றதும், அர்ஜுனன் ஆமாம்! கண்ணா அதில் என்ன சந்தேகம். அது கிளி தான். கிளி தான் என்று மூன்று முறை அடித்துச் சொன்னான்.

பிறகு கண்ணன் என்ன நீ! நான் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுகிறாயே அது என்ன பறவை என்று தெளிவாக சொல் என்கிறார் அர்ஜுனனிடம். அர்ஜுனன் கண்ணனிடம் சொல்கிறார், கண்ணா! என்னுடைய பார்வையை விட உன்னுடைய வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம்.
அந்த பறவையை நான் புறா என்று சொன்னதும் அதை நீ கழுகாகவோ, கிளியாகவோ மாற்றிவிட முடியும். அதற்கு ஒரு துளி நேரம் போதாதா? நீயே எல்லாம் என்று ஆன பிறகு எந்த பொருள் எப்படி வேண்டுமானாலும் மாறுமே! நான் நம்புவது உன்னுடைய சக்தியை மட்டும் தான் என்கிறான் அர்ஜுனன்.

ஆக, இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று கடவுளை நாம் முழுமையாக நம்பி விட்டால் அந்த இடத்தில் எதுவாக இருந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை அவரிடம் இருக்கிறது என்பதை மட்டுமே. இதுவே பக்திக்கு தேவையான முதல் தகுதியாகவே உள்ளது.
துன்பம் என்று நீங்கள் வருந்தாமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அந்த துன்பம் ஒரு நாள் வற்றாத ஒரு கடலை போல் இன்பமாக மாறும் என்பதை நாம் மனதில் தீர்க்கமாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையே நம்மை இறைவனை மனதார உணரச்செய்யும். அதுவே நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |