மஹாபாரதம் எழுத அருள் புரிந்த ஞானசரஸ்வதி
கல்வி தான் எல்லாமே.ஒருவரிடம் திருட முடியாத பெரிய சொத்து கல்வி. அப்படியாக பள்ளிகள் திறக்கும் வேளையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க கல்விக்கு அதிபதியான ஞான சரஸ்வதி தேவியை தெலுங்கானா ஆதிலாபாத்தில் பஸாராவில் வழிபட்டு வரலாம்.
மஞ்சள் காப்புடன் காட்சிதரும் தேவியை வியாழனன்று தரிசிப்பது விசஷேம்.மிக பெரிய வாழ்க்கை பாடமான மகாபாரதத்தை எழுதியவர் வியாச மகரிஷி.
இவர் கோதாவரி நதிக்கரையில் தவம் செய்த போது சரஸ்வதி தேவி அவர் முன் தோன்றி, 'மகாலட்சுமி, பார்வதியோடு சேர்த்து எனக்கு ஒரு கோயில் கட்டுங்கள்' என உத்தரவிட்டாள்.
அதன்படி வியாசரும் மூன்று தேவியருக்கும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே மகாபாரதத்தை எழுத ஆரம்பித்திருக்கிறார். இதனால் இவ்வூருக்கு 'வியாசபுரி' எனப் பெயர் வந்தது.
பிற்காலத்தில் 'வஸாரா' என்றும், 'பஸாரா' என்றும் மாறியது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் 'சூர்யேஸ்வர சுவாமி'யை சிவலிங்க வடிவில் தரிசிக்கலாம்.
தினமும் இவர் மீது சூரியக்கதிர் படுவதால் 'சூர்யேஸ்வரர்' எனப்படுகிறார். சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலைச் சுற்றி எட்டு தீர்த்தங்கள் உள்ளன.
ஞான சரஸ்வதி கைகளில் வீணை, அட்சமாலை, ஏடு தாங்கியபடி இருக்கிறாள். அருகில் மகாலட்சுமியும், பிரகாரத்தில் மகாகாளியும் உள்ளனர்.
இக்கோயிலில் பிரசாதமாக தரப்படும் மஞ்சளைச் சாப்பிட்டால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். வியாசர் தவம் புரிந்த குகையையும் தரிசிக்கலாம். இப்பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இங்கு வழிபடுகின்றனர் பின்னரே தங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கின்றனர்.
நாமும் முடிந்தால் வியாச மகரிஷி. வழிபட்டு உலகிற்க்கே பெருங்காவியம் கொடுக்க அருள் புரிந்த ஞான சரஸ்வதி தேவியை வழிபட்டு வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |